Don't Miss!
- News
இந்திக்கு எதிரான போராட்டம் தொடரும்.. பிற மொழிகளை அழிக்க பாஜக முயற்சி.. மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு!
- Automobiles
பெட்ரோல் பைக் வச்சிருந்தா அத ஓரங்கட்டி வச்சிடுங்க.. இந்த இ-சைக்கிள்ல ஒரு கிமீ பயணிக்க வெறும் 5 பைசாதான் ஆகும்!
- Lifestyle
பெற்றோர்களே! உங்க குழந்தை அதிகமா சாப்பிடுறாங்களா? அப்ப இந்த அறிகுறிகள கண்டிப்பா நீங்க கவனிக்கணுமாம்!
- Finance
இது அதிர்ச்சியளிக்கிறது..FPO-வில் தாக்கத்தினை ஏற்படுத்தும் ஒரு முயற்சி.. அதானி குழுமம் பரபர கருத்து!
- Sports
அவர் டென்னிஸ் ஆடிட்டு இருக்காருங்க.. ஹர்திக் பாண்ட்யாவிடம் உள்ள ஸ்பெஷல் ஷாட்.. இர்ஃபான் புகழாரம்
- Education
Mega Job Fair in tiruppur 2023:ஆயிரம் நிறுவனங்கள் பங்கேற்கும் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் எங்கே தெரியும்...?
- Travel
சென்னையில் இத்தனை அமானுஷ்யம் நிறைந்த இடங்களா – இனி இந்த பக்கம் போகவே கூடாது!
- Technology
வாரே வா.. பிரபல நிறுவனத்தின் 42-இன்ச் ஸ்மார்ட் டிவிக்கு தள்ளுபடி வழங்கி அதிரடி காட்டிய பிளிப்கார்ட்.!
யோகிபாபுவின் நடிப்புத்திறனை வெளிப்படுத்தும் பொம்மை நாயகி.. வெளியானது சூப்பர் ட்ரெயிலர்!
சென்னை : நடிகர் யோகிபாபு காமெடியனாக கோலிவுட்டில் களமிறங்கி ஏராளமான படங்களில் நடித்து ஏராளமான ரசிகர்களை பெற்றுள்ளார்.
காமெடியனாக இருந்தாலும் மண்டேலா உள்ளிட்ட பல படங்களில் இவர் தனது நடிப்புத் திறனை வெளிப்படுத்தி வருகிறார்.
தற்போது இவரது நடிப்பில் பா ரஞ்சித் தயாரிப்பில் பொம்மை நாயகி என்ற படம் வரும் பிப்ரவரி மாதம் 3ம் தேதி திரையரங்குகளில் ரிலீசாகவுள்ளது.
கார்த்திகை
தீபத்தையொட்டி
பழனியில்
பிரபல
காமெடி
நடிகர்
யோகிபாபு
சாமி
தரிசனம்!

நடிகர் யோகிபாபு
நடிகர் யோகி பாபு காமெடியனாக கோலிவுட்டில் களமிறங்கி விஜய் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார். பல வெற்றிப் படங்களில் இவரது பங்கு கணிசமாக இருந்து வருகிறது. தொடர்ந்து முன்னணி நடிகர்களுடன் இவர் நடித்து வருகிறார். இவரது கால்ஷீட்டிற்காக இயக்குநர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் காத்திருக்கும் நிலை காணப்படுகிறது.

நாயகனாக நடிக்கும் யோகிபாபு
இதனிடையே தன்னுடைய நடிப்பை வெளிப்படுத்தும் வகையில் மண்டேலா உள்ளிட்ட படங்களிலும் யோகி பாபுவை காண முடிகிறது. இந்தப் படங்களில் இவரது நடிப்பு சிறப்பான விமர்சனங்களை பெற்றுள்ள நிலையில், தொடர்ந்து இவருக்கு ஹீரோவாக நடிக்கும் வாய்ப்புகளும் அதிகளவில் கிடைத்து வருகிறது.

பொம்மை நாயகி படம்
இந்நிலையில் தற்போது பா ரஞ்சித்தின் நீலம் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள பொம்மை நாயகி படத்தில் நாயகனாக நடித்துள்ளார் யோகிபாபு. இந்தப் படத்தை ஷான் என்பவர் எழுதி இயக்கியுள்ளார். பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகும் தன்னுடைய மகளுக்காக போராடும் தந்தையாக இந்தப் படத்தில் யோகிபாபு நடித்துள்ளார்.

பிப்ரவரி 3ம் தேதி ரிலீஸ்
பொம்மை நாயகி படம் வரும் பிப்ரவரி 3ம் தேதி திரையரங்குகளில் ரிலீசாக உள்ள நிலையில், படத்தின் ட்ரெயிலரை படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது. மிகவும் இயல்பான தன்னுடைய நையாண்டிகளை ஓரம்கட்டிவிட்டு படத்தில் யோகிபாபு பொறுப்புள்ள தந்தையாக நடித்துள்ளது தெரிகிறது.
இயக்குநராக மட்டுமில்லாமல் அடுத்தடுத்த படங்களை தன்னுடைய நீலம் புரொடக்ஷன்ஸ் நிறுவனத்திற்காக தயாரித்து வருகிறார் பா ரஞ்சித். கடந்த ஆண்டில் இவரது நடிப்பில் சமுத்திரக்கனி நடிப்பில் வெளியான ரைட்டர் படம் மிகச்சிறந்த விமர்சனங்களை பெற்றது. தொடர்ந்து கலையரசன் நடிப்பில் குதிரைவால் என்ற படமும் வெளியானது. தற்போது யோகிபாபு நடிப்பில் பொம்மை நாயகி படம் வெளியாகவுள்ளது.