யோகி பாபுவின் காக்டெய்ல்.. ஜூலை 10ம் தேதி ஓடிடியில் ரிலீஸ் !
சென்னை : நடிகர் யோகிபாபுவின் காக்டெய்ல் OTT-யில் வெளியாக உள்ளதாக தகவல்கள் வந்துள்ளன.
முன்னணி நடிகர்களுடன் காமெடியில் கலக்கி வரும் யோகிபாபு அதேசமயம் பல படங்களில் ஹீரோவாகவும் நடித்து வருகிறார்.
யாரையும் காயப்படுத்தாத தன்னுடைய காமெடி திறமையின் மூலம் தமிழ் திரைப்படத்துறையில் முன்னணி காமெடி நடிகராக வலம் வரும் யோகி பாபுவின் புதிய திரைப்படம் ஒன்று தற்பொழுது OTT-யில் வெளியாக உள்ளது.

பலரையும் ரசிக்க
தமிழ் திரைப்படத்துறையில் தனது இயல்பான காமெடி திறமையால் பலரையும் ரசிக்க வைத்துக் கொண்டிருக்கும் யோகிபாபு தற்போது முன்னணி காமெடி நடிகர்களில் ஒருவராக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

கதாநாயகன்
விஜய், அஜித், ரஜினி என பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து காமெடியில் கலக்கி வரும் யோகி பாபு அதேசமயத்தில் ஒரு சில படங்களில் கதாநாயகனாகவும் நடித்து கொண்டிருக்கிறார்.

நல்ல வரவேற்பு
யோகிபாபு கதாநாயகனாக நடித்த கோலமாவு கோகிலா மற்றும் தர்மபிரபு போன்ற படங்கள் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வந்த நிலையில் தற்போது காக்டெய்ல் என்ற படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் யோகிபாபு நடித்து வருகிறார்.

கடவுளைப் போன்று
காக்டெய்ல் படத்தின் போஸ்டர் சில மாதங்களுக்கு முன்பு வெளியான நிலையில் அதோடு சில சர்ச்சைகளையும் ஏற்படுத்தி வந்தது. இதில் பயன்படுத்திய யோகி பாபுவின் புகைப்படம் கடவுளைப் போன்று வேடமிட்டு திரைப்படத்தின் பெயரை காக்டெய்ல் என வைத்திருப்பதால் இது கடவுளை அவமதிக்கும் செயலாகும் என பலரும் இந்த படத்தின் போஸ்டரையும் இந்த படத்தையும் எதிர்த்து வந்த நிலையில் தற்போது இந்த படத்தின் அனைத்து வேலைகளும் முடிந்து படம் வெளியீட்டுக்காக காத்துக்கொண்டு இருக்கிறது

சின்னத்திரை படப்பிடிப்பு
நாளுக்கு நாள் அதிகமாக பரவி வரும் நோய்த்தொற்றின் காரணமாக பல இடங்களும் பல வேலைகளும் முடங்கியுள்ள நேரத்தில், சின்னத்திரை படப்பிடிப்பு வேலைகளுக்காக ஓரிரு வாரங்கள் அனுமதி அளிக்கப்பட்டு வந்தன. நோய்த்தொற்றின் வீரியம் தாக்கம் குறையாததால், சீரியலுக்கு அளிக்கப்பட்ட அனுமதியும் தற்பொழுது நீக்கப்பட்டு அனைத்து படப்பிடிப்புகளும் முற்றிலும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. திரையரங்குகளும் பல மாதங்களாக திறக்காமல் அப்படியே மூடி உள்ளன.

யோகிபாபுவின் காக்டெய்ல்
திரையரங்குகள் திறக்கப்படாத காரணத்தினால் திரைக்கு வர தயாராக இருந்த பல நூறு படங்கள் கடந்த மூன்று மாதங்களுக்கு மேலாக செய்வதறியாது அப்படியே முடங்கி கிடக்கிறது. இந்நிலையில் ஒரு சில படங்கள் தற்போது வேறு வழியில்லாமல் OTT என்கின்ற ஆன்லைன் தளங்களில் தங்களது படங்களை வெளியிட்டு வரும் வேளையில் தற்பொழுது யோகிபாபுவின் காக்டெய்ல் படமும் வெளியாக உள்ளது.

OTT தளத்தில்
அறிமுக இயக்குனர் விஜய முருகன் இயக்கும் காக்டெய்ல் திரைப்படம் யோகி பாபு, மைம் கோபி மற்றும் பல தொலைக்காட்சி காமெடி நட்சத்திரங்கள் நடித்துள்ள இந்த படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் தற்பொழுது தியேட்டரில் வெளியாகாத சூழ்நிலை உள்ளதால் OTT தளத்தில் வெளியிடப்படுகிறது.

காமெடி திரைப்படம்
இவ்வாறு யோகிபாபுவின் நடிப்பில் கலகலப்பாக உருவாகியுள்ள காமெடி திரைப்படமான காக்டெய்ல் ஜூலை 10ம் தேதி ஜீ5 ஆன்லைன் தளத்தில் வெளியாக உள்ளதாக தகவல்கள் வந்துள்ளது.


Click it and Unblock the Notifications











