ரசிகர்களை மகிழ்விக்க இந்த வாரம் OTTல் வரும் திரைப்படங்கள்!
சென்னை: திரையரங்குகளில் மாஸ்டர் திரைப்படத்திற்கு பிறகு வெளியான எந்த படமும் பெரிதாக சோபிக்கவில்லை.
திரையரங்கில் வந்த ஒரு மாதத்திற்குள் பெரும்பாலான படங்கள் OTT யில் வெளியிடப்படுகின்றன.
இந்த வாரம் ரசிகர்களை மகிழ்விக்க OTT ரிலிஸ் ஆகும் சில படங்கள் குறித்த தொகுப்பு.

HBO max ல் வெளியீடு
ஆடம் விங்கார்ட் இயக்கத்தில் அகிலமெங்கும் ரசிகர்களை மகிழ்விக்க திரையரங்குகளில் வெளியாகி வசூல் வேட்டை செய்த படம் காட்ஸில்லா vs காங். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை கவர்ந்துள்ள இந்த பிரம்மாண்டமான படம் நாளை HBO max ல் ஸ்ட்ரீம் ஆகவுள்ளது.

டெண்ட்கொட்டா ரிலிஸ்
ஜெ.சபரிஸ் இயக்கத்தில் மறைந்த நடிகை விஜே சித்ரா முதன்மை கதாபாத்திரத்தில் நடிப்பில் திரையரங்குகளில் வெளியான திரைப்படம் கால்ஸ். த்ரில்லர் கதைகளத்தை கொண்ட இந்த திரைப்படம் இந்த வாரம் ஏப்ரல் 2ம் Tentkotta வில் ஸ்ட்ரீம் ஆகவுள்ளது.

Netflix வெளியீடு
மலையாளம் மட்டுமின்றி தமிழிலும் தனக்கென்று தனி ரசிகர் பட்டாளத்தை கொண்டிருப்பவர் பஹத் பாசில். நசீப் யூசப் இயக்கத்தில் பஹத் பாசில் நடிப்பில் இந்த வாரம் ஏப்ரல் 2ம் தேதி நேரடியாக Netflix ல் வெளிவரவுள்ள படம் இருள். க்ரைம் த்ரில்லர் கதைகளத்தை கொண்ட இந்த படம் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

நேரடி OTT ரிலிஸ்
யோகிபாபு ஹீரோவாக நடித்துள்ள மண்டேலா படத்தின் டீசர், ட்ரைலர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. மடோன் அஸ்வின் இயக்கத்தில் தற்கால அரசியல் சூழலை மையமாக வைத்து தயராகியுள்ள இந்த படம் நேரடியாக வருகின்ற ஏப்ரல் 4ம் தேதி காலை 9:30 மணிக்கு ஸ்டார் விஜய் டிவியில் ஒளிபரப்பாகவுள்ளது.


Click it and Unblock the Notifications











