யோகிபாபு ரசிகர்களுக்கு ஹேப்பி நியூஸ்…மண்டேலா டிரைலர் வெளியாகும் தேதி அறிவிப்பு!

சென்னை : நகைச்சுவை நடிகராக இருந்த யோகிபாபு தர்மபிரபு திரைப்படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். அந்த படத்தின் வெற்றியைத் தொடர்ந்து காமேடி ஹீரோவாக கலக்கி வருகிறார்.

இயக்குனர் பாலாஜி மோகன் தயாரித்திருக்கும் இப்படத்தை புதுமுக இயக்குனர மடோன் அஷ்வின் இயக்கி உள்ளார்.

மண்டேலா படத்தின் டிரைலர் நாளை வெளியாக உள்ளதாக ஒய் நாட் ஸ்டூடியோஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

ஷீலா ராஜ்குமார்

ஷீலா ராஜ்குமார்

இவர் மடோன் அஸ்வின் இயக்கத்தில் மண்டேலா என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இதில் யோகிபாபுக்கு ஜோடியாக அழகிய தமிழ் மகள் என்ற சீரியல் மூலம் பிரபலமான ஷீலா ராஜ்குமார் இப்படத்தில் நடித்துள்ளார். மேலும், சங்கிலி முருகன், கண்ணன் ரவி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்

பஞ்ச் வசனம்

பஞ்ச் வசனம்

இந்நிலையில், மண்டேலா படத்தின் டீசர் அண்மையில் வெளியாகி அனைவரின் பாராட்டுக்களையும் பெற்றது. இதில், யோகிபாபுவின் வழக்கமான லோள்ளு காமெடிகள் இடம் பெற்றுள்ளன. நெல்சன் மண்டேலா என்ற பெயரோடு வரும் யோகிபாபு நோட்டாவாவது கோட்டாவாவது காசு கொடுத்தான் ஓட்டு என் பஞ்ச் வசனம் பேசியுள்ளார். தற்போது சட்டமன்றத் தேர்தல் வர உள்ள நிலையில் இந்த வசனம் பெரும் வரவேற்றை பெற்றது.

சமூக கருத்து பாடல்

சமூக கருத்து பாடல்

டீசர் மட்டும்தான் நல்ல இருக்கும்னு பாத்த இப்படத்தில் இடம் பெற்ற ஒரு நீதி ஒன்பது சாதி என்ற வேற லேவலில் உள்ளது. பல சமூக கருத்துக்களை கொண்ட யுகபாரதியின் வரிகள் அனைவரையும் உற்று நோக்க வைத்துள்ளது. கிராமத்து பின்னணியில் பாடல் படமாக்கப்பட்ட விதமும் அழகாக உள்ளது.

டிரைலர் நாளை ரிலீஸ்

டிரைலர் நாளை ரிலீஸ்

இந்நிலையில் மண்டேலா படத்தின் டிரைலர் நாளை வெளியாகும் என்று ஒய் நாட் ஸ்டுடியோஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. இதனால் யோகிபாபு ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இப்படத்திற்கு பரத் சங்கர் இசையமைத்துள்ளார். விது அய்யண்ணா என்பர் ஒளிப்பதிவும், பிலோமின் ராஜ்படத் தொகுப்புகளை பணி மேற்கொண்டுள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X