யோகி பாபு -தர்ஷா குப்தா ஜோடி சேரும் மெடிக்கல் மிராக்கிள்.. பட்டையை கிளப்பும் பர்ஸ்ட் லுக் போஸ்டர்!
சென்னை : நடிகர் யோகிபாபு அடுத்தடுத்து முன்னணி நடிகர்களுடன் இணைந்து காமெடி கலாட்டா செய்து வருகிறார்.
ஒருபக்கம் நாயகனாகவும் படங்களில் நடித்து வருகிறார். அவரது பொம்மை நாயகி படம் பா ரஞ்சித் தயாரிப்பில் 3ம் தேதி ரிலீசாகவுள்ளது.
இதனிடையே அவரது மெடிக்கல் மிராக்கிள் படத்தின் படப்பிடிப்பும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

நடிகர் யோகிபாபு
நடிகர் யோகிபாபு விஜய், ரஜினி என முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து வருகிறார். இவரது கால்ஷீட்டிற்காக பிரபல இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள் காத்திருக்கும் நிலை காணப்படுகிறது. முன்னணி படங்களில் காமெடி கேரக்டர்களில் மட்டுமில்லாமல் கேரக்டர் ரோல்களிலும் யோகிபாபுவை பார்க்க முடிகிறது.

அடுத்தடுத்த படங்கள்
சமீபத்தில் வெளியான லவ் டுடே படத்திலும் முக்கியமான கேரக்டரில் யோகிபாபுவை பார்க்க முடிந்தது. முன்னதாக பிரதீப்பின் கோமாளி படத்திலும் சிறப்பான கேரக்டரில் யோகிபாபு நடித்திருந்தார். தற்போது அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகிவரும் யோகிபாபு, பிரபல கிரிக்கெட் வீரர் தயாரிக்கும் முதல் படமான lets get married படத்திலும் ஹரீஷ் கல்யாண், இவானாவுடன் இணைந்து நடிக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பொம்மை நாயகி படம்
இவரது நடிப்பில் வரும் பிப்ரவரி 3ம் தேதி பொம்மை நாயகி படம் வெளியாகவுள்ளது. இந்தப் படத்தை பிரபல இயக்குநர் பா ரஞ்சித் தயாரிக்கவுள்ளார். இந்தப் படத்தின் ட்ரெயிலர் உள்ளிட்டவை வெளியாகி வரவேற்பை பெற்ற நிலையில், படத்தில் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாகும் சிறுமியின் அப்பாவாக யோகிபாபு நடித்துள்ளார்.

பக்தி படத்தில் யோகிபாபு
இந்தப் படத்தை தொடர்ந்து அடுத்ததாக பக்தி படத்திலும் யோகிபாபு கமிட்டாகியுள்ளார். சன்னிதானம் பிஓ என்று பெயரிடப்பட்டுள்ள அந்தப் படத்தை பிரபல இயக்குநர் விக்னேஷ் சிவன் கிளாப் அடித்து துவக்கி வைத்துள்ளார். இந்நிலையில் மெடிக்கல் மிராக்கிள் என்ற படத்தில் நாயகனாக நடித்து வருகிறார் யோகிபாபு.

மெடிக்கல் மிராக்கிள் படம்
இந்தப் படத்தில் யோகி பாபுவிற்கு தர்ஷா குப்தா ஜோடியாக நடித்து வருகிறார். இதனியே இந்தப் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. இந்தப் போஸ்டரை தர்ஷா குப்தா தன்னுடைய சமூக வலைதளப்பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த போஸ்டரில் மெடிக்கலில் பயன்படுத்தப்படும் பொருட்கள் அனைத்தும் யோகிபாபுவை சூழ்ந்துள்ளதாக காணப்படுகிறது.


Click it and Unblock the Notifications











