யோகி பாபுவுக்கு புரோமோஷன்.. இப்போ பாலிவுட் பிரபல நடிகையுடன் காதல்!
காற்றின் மொழி படத்தில் கௌரவத் தோற்றத்தில் நடித்துள்ளார் யோகி பாபு.
சென்னை: காற்றின் மொழி படத்தில் இரண்டே காட்சிகளில் வந்தாலும், தன் பங்களிப்பைச் சிறப்பாகச் செய்திருக்கிறார் காமெடி நடிகர் யோகி பாபு.
தமிழின் முன்னணி காமெடி நடிகர்களுள் ஒருவராக வளர்ந்துள்ளார் யோகி பாபு. கவுண்டமணி, வடிவேலு வரிசையில் தற்போது அவருக்கென தனி ரசிகர் பட்டாளம் உருவாகியுள்ளது. அதிலும் கோலமாவு கோகிலா பட வெற்றியைத் தொடர்ந்து, படத்திற்குப் படம் அவரது காதல் காட்சிகளும் சுவாரஸ்யமாகி இருக்கிறது.
இதனாலேயே ஒரு தலைக் காதல் காமெடி என்றால் யோகி பாபுவையே இயக்குநர்கள் தேர்வு செய்கிறார்கள் போல.

கௌரவத் தோற்றம்:
அந்தவகையில் ராதாமோகன் இயக்கத்தில் ஜோதிகா நாயகியாக நடித்துள்ள காற்றின் மொழி படத்திலும் கௌரவத் தோற்றத்தில் நடித்துள்ளார் யோகி பாபு. இதிலும், ஒரு தலைக்காதலால் பீல் பண்ணும் கதாபாத்திரம் தான் அவருக்கு. கோலமாவு கோகிலாவில் நயனை ஒரு தலையாகக் காதலித்தவர், இதில் யாரை காதலிக்கிறார் எனக் கேட்டால் மயக்கமே வந்து விடும்.

பாலிவுட் காதலி:
ஆம், தமிழ் சினிமாவில் இருந்து புரொமோசனாகி பாலிவுட்டின் கனவுக்கன்னியான தீபிகா படுகோனேவைத் தான் இப்படத்தில் அவர் ஒருதலையாகக் காதலிக்கிறார். இவரால் தான் அவர் நடிகையாகிறாராம். பின்னர் முன்னணி நடிகையானதும் யோகிபாபுவைக் கழட்டி விட்டு விடுகிறாராம்.

கீர்த்தி போதும்:
இதையெல்லாம் ஜோதிகாவிடம் சொல்லிப் புலம்பும் யோகி பாபு, பின்னர் பாலிவுட்டெல்லாம் தனக்கு செட்டாகாது என மீண்டும் தமிழ் சினிமா பக்கமே திரும்பி விடுகிறார். இங்கு கீர்த்தி சுரேஷை காதலிப்பதாக படத்தில் வசனங்கள் இடம்பெற்றுள்ளது.

ரஜினி பட நாயகி:
ரஜினிக்கு ஜோடியாக கோச்சடையான் படத்தில் நடித்தவர் தீபிகா படுகோனே. அவருக்கும், அவரது காதலர் ரன்வீர் சிங்கிற்கும் நேற்று தான் திருமணம் முடிந்தது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











