யோகிபாபு ஹீரோவாக நடிக்கும் “மெடிக்கல் மிராக்கில்“ .. அட ஹீரோயின் யார் தெரியுமா?
சென்னை : யோகிபாபு கதாநாயகனாக நடிக்கும் மெடிக்கல் மிராக்கில் திரைப்படத்தின் படப்பிடிப்பு இன்றிலிருந்து தொடங்கி உள்ளது.
முழுக்க முழுக்க அரசியல் காமெடியாக உருவாகவுள்ள "மெடிக்கல் மிராக்கல்" படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் தொடங்கி உள்ளது.
சென்னையில் நடைபெற்ற பூஜையில், படக்குழுவினர் பலரும் கலந்துக் கொண்டனர். சென்னை மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் படப்பிடிப்பு நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

மெடிக்கல் மிராக்கல்
ஏ1, பாரீஸ் ஜெயராஜ், படங்களை தந்த இயக்குநர் ஜான்சன் கே, தனது அடுத்த படத்தை துவங்கியுள்ளார். இந்த புதிய திரைப்படத்திற்கு மெடிக்கல் மிராக்கல் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. முழுக்க முழுக்க காமெடி ஜானரில், அனைவரும் ரசிக்கும் வகையில் இப்படம் உருவாக இருப்பதாக கூறப்படுகிறது இப்படத்தை எழுதி இயக்குவதோடு, ஏ1 புரோடக்சன்ஸ் மூலம் தயாரிப்பாளராகவும் அறிமுகமாகி இருக்கிறார் இயக்குநர் ஜான்சன்.கே.

ஹீரோயின் யார் தெரியுமா?
இப்படத்தில் நாயகனாக தமிழ் சினிமாவின் முன்னணி நகைச்சுவை நடிகர் யோகி பாபு நடிக்கிறார். இப்படத்தில் நடிகர் யோகிபாபு ஓலா டிரைவர் கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார். தாண்டவம் திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமான தர்ஷா குப்தா இப்படத்தில் நாயகியாக நடிக்கிறார்.

முன்னணி நடிகர்கள்
இவர்களுடன் மன்சூர் அலிகான், சேசு, கல்கி, மதுரை முத்து, டி.எஸ்.ஆர், நாஞ்சில் சம்பத், விஜய் டிவி பாலா, டைகர் தங்கதுரை, சித்தார்த் விபின் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள். சித்தார்த் விபின் இசையமைக்க உள்ள இப்படத்திற்கு எஸ்.மணிகண்ட ராஜா, எடிட்டிங் தமிழ்குமரன் ஆகியோர் தொழில்நுட்ப கலைஞர்கள் இப்படத்தில் இணைந்துள்ளனர்.

அதிகரிக்கும் எதிர்பார்ப்பு
நகைச்சுவை நடிகராக இருந்த யோகிபாபு தர்மபிரபு ,மண்டேலா, கூர்கா போன்ற திரைப்படங்களில் ஹீரோவாக நடித்திருந்தார். ஒடிடியில் வெளியான 'மண்டேலா' படத்தில் சிகை திருத்தும் தொழிலாளியாக நடித்து அனைவர் இடத்திலும் பாராட்டைபெற்றார். இதையடுத்து, தற்போது "மெடிக்கல் மிராக்கல்" படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதால், இப்படத்தின் மீது எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.


Click it and Unblock the Notifications











