'நீங்க நடிச்சாதான் கல்யாணம் நடக்கும்னு அந்த பொண்ணு சொல்லிச்சு.. ஓகேன்னுட்டேன்.. யோகிபாபு பேச்சு!

'நீங்க நடிச்சாதான் கல்யாணம் நடக்கும்னு அந்த பொண்ணு சொல்லிச்சு' யோகிபாபு பேச்சு!

By

சென்னை: சம்பள விஷயத்தில் நான் கறார் இல்லை என்று நடிகர் யோகிபாபு சொன்னார்.

பாக்யா சினிமாஸ் பட நிறுவனம் சார்பில் விக்னேஷ் ஏலப்பன் தயாரிப்பில் ஷக்தி சிதம்பரம் இயக்கியுள்ள படம் பேய்மாமா.

யோகிபாபு கதையின் நாயகனாக நடித்துள்ள இந்தப்படம் முழுக்க முழுக்க பொழுதுபோக்கு அம்சமுள்ள படமாக உருவாகி இருக்கிறது.

ரொம்ப பயமா இருக்கு

ரொம்ப பயமா இருக்கு

இப்படத்தின் பாடல் வெளியிட்டு விழா சென்னையில் உள்ள நட்சத்திர ஓட்டல் ஒன்றில் நேற்று நடந்தது. அமைச்சர் கடம்பூர் ராஜூ பாடல்களை வெளியிட்டார். இந்த விழாவில் நடிகர் யோகிபாபு பேசும்போது கூறியதாவது: ஷக்தி சிதம்பரம் சார் இந்த மேடையில் என்னை கதாநாயகனாக நிற்க வச்சிட்டார். ரொம்ப பயமா இருக்கு.

வடிவேலு ஜீனியஸ்

வடிவேலு ஜீனியஸ்

இந்தப் படம் முதலில் வடிவேல் சாருக்கு பண்ணியது என்று ஷக்தி சார் சொன்னார். உடனே நான் "வடிவேலு சார், ஜீனியஸ். எனக்கு எப்படி செட்டாகும்"னு கேட்டேன். செட்டாகும்னு நடிக்க வச்சிருக்கார். இந்தப்படம் வெற்றி அடைய உங்கள் ஆதரவும் அன்பும் வேணும். நான் சம்பள விசயத்தில் பெரிய கறார் கிடையாது. என் மேனஜரிடம் வேண்டுமானால் கேளுங்க.

கல்யாணம் நடக்கும்

கல்யாணம் நடக்கும்

சமீபத்தில் கூட ஒரு அசிஸ்டென்ட் டைரக்டர் பொண்ணு.. ஒரு கதைப் பண்ணிருக்கேன், நீங்க நடிச்சுக் கொடுக்கணும். ஆனால் என்கிட்ட பட்ஜெட் இல்ல. இந்தப் படம் நடந்தாதான் எனக்கு கல்யாணம் நடக்கும்னு சொல்லிச்சு. நான் உடனே ஃப்ரீயா நடிச்சித் தர்றேம்மா, உனக்கு முதல்ல கல்யாணம் நடக்கட்டும் என்று சொன்னேன்.

அட்ஜெஸ்மென்ட்

அட்ஜெஸ்மென்ட்

இப்படி நிறைய அட்ஜெஸ்மென்ட் பண்ணிட்டுதான் இருக்கேன். ஷக்தி சிதம்பரம் டயலாக்கில் நிறைய சுதந்திரம் கொடுத்தார். அவருக்கு நன்றியைத் தெரிவிச்சிக்கிறேன். படத்தின் ட்ரைலரில் சொன்ன மாதிரி நான் காமெடியன்தான், காமெடியன்தான். இவ்வாறு யோகிபாபு கூறினார்.

எப்படி பேசுவது

எப்படி பேசுவது

இயக்குனர் மிஷ்கின் பேசும்போது, யோகிபாபுவை இதுவரை நேரில் சந்தித்தது இல்லை. அந்தத் தம்பியிடம் எப்படி பேசுவது என்று சிந்திக்கும் போது, அவர் என்கிட்ட நேரே வந்து, சார் நான் உங்க ரசிகன் என்றார். இந்த எளிமை, வாழ்நாள் முழுதும் அவரை நல்லா வைக்கும். இந்த 7 மாதங்களாக நாம் எல்லாருமே பேயாகத்தான் இருந்தோம். இப்பத்தான் மனுசங்களா உலாவுறோம் என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X