twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    நயன் காதலரின் கன்னத்தை கிள்ளி ‘க்யூட்’ சொல்லும் நடிகர்.. வைரலாகும் வீடியோ

    சர்கார் படப்பிடிப்பில் எடுக்கப்பட்ட யோகி பாபுவின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

    |

    Recommended Video

    யோகி பாபுவின் கன்னத்தை கிள்ளும் விஜய்...வைரல் வீடியோ

    சென்னை : சர்கார் படத்தில் யோகி பாபுவின் கன்னத்தை விஜய் கிள்ளுவது போன்ற வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.

    விஜய்-ஏ.ஆர்.முருகதாஸ் கூட்டணியில் உருவாகி வரும் மூன்றாவது படம் 'சர்கார்'. இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். அரசியல் கதைக்களத்தில் உருவாகிவரும் இப்படத்தில் ராதாரவி மற்றும் பழ.கருப்பையா இருவரும் அரசியல்வாதிகளாக நடிக்கின்றனர்.

    மேலும், வரலட்சுமி சரத்குமார், யோகிபாபு, பிரேம் குமார் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். கிரிஷ் கங்காதரன் ஒளிப்பதிவு செய்கிறார்.

    சர்ச்சை போஸ்டர்:

    கடந்த மாதம் விஜய் பிறந்தநாளையொட்டி வெளியான இப்படத்தின் போஸ்டர் பெரும் சர்ச்சையை உண்டாக்கியது. போஸ்டரில் விஜய் புகைப்பிடிப்பது போன்று இருப்பதற்கு சில கட்சிகள் மற்றும் அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தன.

    விஜய்க்கு நோட்டீஸ்:

    விஜய்க்கு நோட்டீஸ்:

    இது தொடர்பாக தமிழக சுகாதாரத்துறையும் விஜய் மற்றும் முருகதாஸுக்கு நோட்டீஸ் அனுப்பியது. அதனைத் தொடர்ந்து சன் பிக்சர்ஸ் தனது டிவிட்டர் பக்கத்தில் இருந்து சம்பந்தப்பட்ட போஸ்டரை நீக்கியது.

    முக்கிய காட்சிகள்:

    முக்கிய காட்சிகள்:

    இந்நிலையில் இப்படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு சென்னையில் நடந்து வருகிறது. சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள ஈ.வி.பி. பிலிம்சிட்டியில் பிரம்மாண்ட அரங்குகள் அமைத்து முக்கிய காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றன.

    வரலட்சுமி:

    வரலட்சுமி:

    இந்த சூழ்நிலையில் படப்பிடிப்பின் போது எடுக்கப்பட்ட யோகி பாபுவின் புதிய வீடியோ ஒன்றை வரலட்சுமி தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில் ஆப் மூலம் யோகி பாபு பெண் போன்ற அலங்காரம் செய்யப்பட்டுள்ளது.

    யார் எனத் தெரிகிறதா?

    யார் எனத் தெரிகிறதா?

    கூடவே, யோகி பாபுவின் கன்னத்தை கை ஒன்று, ‘சோ க்யூட்' எனக் கிள்ளுவது போன்றும், அதற்கு யோகி பாபு முறைப்பது போன்றும் காட்சிகள் உள்ளது. இந்த வீடியோவுடன் கூடிய பதிவில், ‘யோகி பாபுவை கிள்ளும் அந்த நபர் யார் என்று கண்டுபிடியுங்கள்' என வரலட்சுமி புதிர் போட்டுள்ளார்.

    விஜய் தான்:

    விஜய் தான்:

    வரலட்சுமியின் இந்தக் கேள்வியினாலேயே அது விஜய் தான் என்பது மறைமுகமாகத் தெரிகிறது. இரண்டே நாட்களில் இந்த வீடியோவை இதுவரை 78 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பார்த்து ரசித்துள்ளனர். இந்த வீடியோ இப்போது வைரலாகியுள்ளது.

    English summary
    Actress Varalakshmi Sarathkumar has released a video of Yogi Babu in vijay's Sarkar movie.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X