உலக மகா நடிப்பு.. யோகிபாபுவை வம்பிழுத்த பிரபலம்.. பஞ்சாயத்து இன்னும் தீரவில்லையோ?

திருமணம் செய்ததிலிருந்து விமர்சனம்.. குழந்தை விஷயத்திலும் அப்படி சொன்னார்கள்.. ரோபோ சங்கர் மகள் அதிரடிசென்னை: யோகிபாபு கோலிவுட்டின் முன்னணி காமெடி நடிகராக வலம் வந்துகொண்டிருக்கிறார். காமெடி ஆக்டராக மட்டுமின்றி கதையின் நாயகனாகவும் மறுபக்கம் நடித்துவருவது குறிப்பிடத்தக்கது. ஒரு வருடத்தில் எக்கச்சக்க படங்களில் நடித்துவரும் அவர்; தமிழ் மட்டுமின்றி தெலுங்கு உள்ளிட்ட மொழிகளிலும் பிஸியாக இருக்கிறார். கடைசியாக கெணத்த காணோம் என்ற திரைப்படம் சில நாட்களுக்கு முன்பு வெளியாகி சுமாரான வரவேற்பை பெற்றது. இந்நிலையில் அவர் பற்றி பிரபல பத்திரிகையாளர் பிஸ்மி போட்டிருக்கும் ட்வீட் விவாதத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

சின்னத்திரையில் பிரபலமான லொள்ளு சபா நிகழ்ச்சியில் தனது நடிப்பு பயணத்தை ஆரம்பித்தவர் யோகிபாபு. சந்தானம் உள்ளிட்டோர் மாதிரியே தானும் ஒரு நாள் சினிமாவில் பெரிய அளவில் வெல்வேன் என்று அயராது உழைத்துக்கொண்டிருந்த அவருக்கு கடந்த 2009ஆம் ஆண்டு வெளியான யோகி படத்தில் சிறிய வேடம் கிடைத்தது. அப்போதிருந்துதான் லொள்ளு சபா பாபு யோகிபாபுவாக மாறினார்.

Yogi Babu s Speech Sparks Debate as Journalist Bismi Trolls Him on Twitter
Photo Credit:

டாப் காமெடி நடிகர்: யோகி படத்துக்கு பிறகு பட்டத்து யானை, சூதுகவ்வும், வீரம், மான் கராத்தே என்று பல படங்களில் நடித்தார். தனது வித்தியாசமான ஹேர் ஸ்டைல், திறமையான நடிப்பு காரணமாக ரசிகர்களை தனக்கென சேர்த்துக்கொண்டார். அதுமட்டுமின்றி வடிவேலு, விவேக், சந்தானம் ஆகியோர் காமெடி ட்ராக்கிலிருந்து ஒதுங்க; அந்த வெற்றிடத்தை சரியாக பயன்படுத்தி; படத்துக்கு படம் தன்னுடைய காமெடியில் வெரைட்டி காட்டி சரசரவென்று வளர்ந்தார். அவரது வளர்ச்சி பலருக்கும் சந்தோஷத்தை கொடுத்தது.

கதையின் நாயகன்: தொடர்ந்து காமெடி கேரக்டரில் நடித்துவந்த அவர்; நெல்சன் திலீப்குமார் இயக்கிய கோலமாவு கோகிலா படத்தில் கதையின் நாயகனாக நடித்தார். ஹீரோயினாக நயன்தாரா நடித்திருந்தார். படம் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தது. அப்படத்துக்கு பிறகு மடோன் அஷ்வின் இயக்கத்தில் மண்டேலா படத்திலும் லீடு ரோலில் நடித்தார். அதுவும் ஹிட்டாகி தேசிய விருது வென்றது. வரிசையாக ஹிட்டானதால் தொடர்ந்து லீடு ரோலில் நடித்தாலும் அந்த இரண்டு படங்கள் மாதிரி வெற்றியை மற்ற படங்கள் கொடுக்கவில்லை.

Also Read
திருமணம் செய்ததிலிருந்து விமர்சனம்.. குழந்தை விஷயத்திலும் அப்படி சொன்னார்கள்.. ரோபோ சங்கர் மகள் அதிரடி
திருமணம் செய்ததிலிருந்து விமர்சனம்.. குழந்தை விஷயத்திலும் அப்படி சொன்னார்கள்.. ரோபோ சங்கர் மகள் அதிரடி

விட்டுக்கொடுக்காத யோகிபாபு: ஹீரோவாக நடித்து வெற்றி கண்டுவிட்டால் அந்தப் பாதையிலிருந்து நகர்வதற்கு பெரும்பாலும் பலரும் யோசிப்பார்கள். ஆனால் இவரோ ஒருபக்கம் கதையின் நாயகனாக நடித்தாலும் மறுபக்கம் காமெடி ரோலையும் செய்துவருகிறார். அப்படி அவர் ஜெயிலர், மாவீரன், குட் பேட் அக்லி, டூரிஸ்ட் ஃபேமிலி, தலைவன் தலைவி உள்ளிட்ட படங்களில் காமெடி ரோல் மட்டுமின்றி கேரக்டர் ரோலையும் ஏற்றார். மேலும் தெலுங்கு உள்ளிட்ட மொழிகளிலும் பிஸியான ஆர்ட்டிஸ்ட்டாக இருக்கிறார்.

கெணத்த காணோம்: ஒருபக்கம் காமெடி ரோல், மற்றொரு பக்கம் கதையின் நாயகன் என ஒரே நேரத்தில் இரண்டு குதிரைகளில் லாவகமாக அவர் சவாரி செய்வதை பார்த்து அனைவரும் ஆச்சரியம்தான் படுகிறார்கள். அந்தவகையில் கடைசியாக அவர் நடிப்பில் கெணத்த காணோம் திரைப்படம் சில நாட்களுக்கு முன்பு (மார்ச் 13) வெளியானது. படத்துக்கு சுமார் வரவேற்பே கிடைத்தது. இப்படத்தின் இயக்குநர் சுரேஷ் சங்கையாவும் உயிரிழந்துவிட்டது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் யோகிபாபு பற்றி பிஸ்மி போட்டிருக்கும் ட்வீட் ஒன்று வைரலாகியிருக்கிறது.

என்ன ட்வீட்?: அதாவது கெணத்த காணோம் பட விழாவில் பேசிய யோகிபாபு, "இந்தப் படத்தின் இயக்குநர் எனது தம்பி சுரேஷ் சங்கையா இப்போது உயிருடன் இல்லை. இயக்குநர் இல்லாமல் ஒரு படத்தை வெளியிடுவது மிகப்பெரிய சிரமம். அந்தவகையில் தயாரிப்பாளர் பல சிரமங்களுடன் இந்தப் படத்தை வெளியிட்டிருக்கிறார். மக்களுடைய பிரச்னைகளை சொல்ல வேண்டுமென்று நினைப்பவர்கள் எந்தக் கதையாக இருந்தாலும் எடுத்துக்கொண்டு என்னிடம் வாருங்கள்; நான் செய்கிறேன்" என்றார். இதை குறிப்பிட்டு பிஸ்மி தனது ட்விட்டர் பக்கத்தில், 'உலக மகா நடிப்புடா சாமி' என கிண்டல் செய்திருக்கிறார். ஏற்கனவே சில வருடங்களுக்கு முன்பு வலைப்பேச்சு டீமுக்கும், யோகிபாபுவுக்கும் முட்டிக்கொண்டது நினைவுகூரத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X