சிம்புவை வச்சு செய்த யோகி பாபு.. விஜய்சேதுபதி வெளியிட்ட ட்ரிப் டீசரில் அடல்ட் வசனங்கள் ஓவர்!

சென்னை: யோகி பாபு, சுனைனா, கருணாகரன் நடிப்பில் உருவாகி உள்ள ட்ரிப் படத்தின் டீசர் தற்போது வெளியாகி உள்ளது.

டென்னிஸ் மஞ்சுநாத் இயக்கியுள்ள இந்த படத்தின் டீசரை தற்போது நடிகர் விஜய்சேதுபதி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

சுனைனா, யோகி பாபு, கருணாகரன், மொட்டை ராஜேந்திரன் உள்ளிட்டவர்களே டீசரை ஆக்கிரமித்துள்ளனர்.

டீசர் முடிவில் யோகி பாபு சொல்லும் வசனம் சிம்புவை சீண்டிப் பார்த்துள்ளது.

விஜய்சேதுபதி ரிலீஸ்

நடிகர் விஜய்சேதுபதி யோகி பாபு, சுனைனா மற்றும் கருணாகரன் நடித்துள்ள ட்ரிப் படத்தின் டீசரை தற்போது தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். மேலும், ட்ரிப் படக்குழுவுக்கு தனது வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார். விஜய்சேதுபதி வெளியிட்டுள்ள நிலையில், அவரது ரசிகர்கள் ட்ரிப் டீசரை ஆவலோடு பார்த்து வருகின்றனர்.

ட்ரிப் ஃபர்ஸ்ட் லுக்

டென்னிஸ் மஞ்சுநாத் இயக்கத்தில் உருவாகியுள்ள ட்ரிப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை சமீபத்தில் ஜி.வி. பிரகாஷ் குமார் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு இருந்தார். ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் ஜீப் மீது காயங்களுடன் கட்டப்பட்டுள்ள சுனைனா அமர்ந்திருக்க, யோகி பாபு மற்றும் கருணாகரன் சீட்டு ஆடும் விதமாக வித்தியாசமான ஃபர்ஸ்ட் லுக் உருவாக்கப்பட்டிருக்கிறது.

சுனைனாவின் நியூ கேம்

சுனைனாவின் நியூ கேம்

நடிகை சுனைனா வெப்சீரிஸ் ஒன்றில் சமீபத்தில் நடித்து அசத்தினார். அதனை தொடர்ந்து அவருக்கு பல படங்கள் வரிசை கட்டி வருகின்றன சமீபத்தில், கெளதம் மேனன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான எனை நோக்கிப் பாயும் தோட்டா படத்தில் முக்கியமான ரோல் செய்திருந்தார். மேலும், கடந்த ஆண்டு இறுதியில் வெளியான சில்லுக்கருப்பட்டி படம் அவருக்கு மிகப்பெரிய வரவேற்பை பெற்றுத் தந்துள்ளது. இந்நிலையில், தற்போது ஹாரர் காமெடி படமான ட்ரிப் படத்தில் லீடு ரோலில் நடித்துள்ளார்.

டீசர் எப்படி இருக்கு?

ஹாரர் த்ரில்லர் படமாக உருவாகி உள்ள ட்ரிப் படத்தின் டீசர், என்ன சொல்ல வருகிறது என்றே புரியாத அளவுக்கு புதிர்கள் நிறைந்து காணப்படுகிறது. சுனைனா, யோகி பாபு, கருணாகரன் உள்ளிட்டோர் ஹாலிவுட் பேய் படங்களில் வருவது போன்று பேய் வீட்டில் மாட்டிக் கொள்கின்றனர். அமானுஷ்ய விஷயங்கள் நடக்கின்றன. போதா குறைக்கு போலீஸ் கெட்டப்பில் மொட்டை ராஜேந்திரன் வந்து மொக்கை காமெடி செய்கிறார்.

சிம்புவை கலாய்த்த யோகி

சிம்புவை கலாய்த்த யோகி

சுனைனாவின் கவர்ச்சி, அமானுஷ்யங்கள் என பரபரக்கும் டீசரில், யோகி பாபு பல பஞ்ச் வசனங்களையும் தொடர்ந்து பேசி வருகிறார். மொட்டை ராஜேந்திரன் குரலில் ரொம்ப ரொம்ப டேஞ்சரான காடு என ஆரம்பிக்கு டீசர், இறுதியில் பேன்ட்டுக்குள்ள இருக்கிறதை வெளிய எடுடா.. என கருணாகரன் கூற, அவரை அடிக்கும் யோகி பாபு, "காப்பாத்தலாம்னு வந்தா சிலம்பரசன் மாதிரியா பேசுற" என சிம்புவை பங்கம் பண்ணியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X