டிடெக்டிவ் கெட்டப்பில் யோகிபாபு… வீரப்பனின் கஜானா ஃபர்ஸ்ட் லுக் அவுட் !

சென்னை : யோகி பாபு நடிக்கும் வீரப்பனின் கஜானா படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி உள்ளது.

மொட்டை ராஜேந்திரன், ராஜேஷ், தேவா, பூஜா, ஜீவிதா உள்ளிட்டோர் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

ராட்சசி படத்தை இயக்கிய கௌதம்ராஜ் இப்படத்தை இயக்க உள்ளார்.

லொள்ளு சபா

லொள்ளு சபா

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான லொள்ளு சபா மக்களிடம் மிகுந்த வரவேற்பை பெற்ற நிகழ்ச்சியாகும். இந்த நிகழ்ச்சியில், உதவி இயக்குநராகப் பணியாற்றினார் யோகி பாபு. அதோடு மட்டும் இல்லாமல் ஒரு சில காட்சிகளிலும் நடித்திருக்கிறார். இதையடுத்து, சுப்பிரமணிய சிவா இயக்கத்தில் அமீர் நாயகனாக நடித்த யோகி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் முதல் தடம் பதித்தார். அதில் ஒரு சிறிய நகைச்சுவைக் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அந்த திரைப்படம் யோகிபாபுக்கு நல்ல தொடக்கமாக அமைந்தது.

சிறப்பானப் பங்களிப்பு

சிறப்பானப் பங்களிப்பு

இதையடுத்து, பையா, கலகலப்பு, அட்டகத்தி, சென்னை எக்ஸ்பிரஸ், சூது கவ்வும், வீரம், மான் கராத்தே, அரண்மனை, யாமிருக்க பயமேன், எனப் பல படங்களில் ஒருசில நகைச்சுவைக் காட்சிகளில் வந்து ரசிகர்களைச் சிரிக்க வைத்தார். மணிகண்டன் இயக்கிய ஆண்டவன் கட்டளை படத்தில் நாயகன் விஜய் சேதுபதியின் நண்பனாக முக்கியமான கதாபாத்திரத்தில் தன்னால் நகைச்சுவையைத் தாண்டி நடிப்பிலும் சிறப்பாகப் பங்களிக்க முடியும் என்று நிரூபித்தார்

கோலமாவு கோகிலா

கோலமாவு கோகிலா

நயன்தாரா நடிப்பில் வெளிவந்த கோலமாவு கோகிலா படத்தில் நயன்தாராவைக் காதலிப்பவராக நடித்து செம அட்ராசிட்டி செய்து இருப்பார். மேலும், எனக்கு கல்யாண வயசுதான் பாடல் யோகி பாபுவை மேலும் பிரபலமாக்கியது. ரஜினகாந்த், அஜித், விஜய்,சூர்யா, தனுஷ், சிவகார்த்திகேயன் போன்ற முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து வருகிறார்.

சென்டிமென்டில் கலக்கினார்

சென்டிமென்டில் கலக்கினார்

நகைச்சுவையில் மட்டும் அல்ல குணசித்திர கதாபாத்திரத்திலும் என்னால் கனகச்சிதமாக நடிக்க முடியும் என்பதை கோமாளி திரைப்படத்தில் நிரூபித்து இருப்பார். அப்படத்தில், நகைச்சுவை, சென்டிமென்ட் என அனைத்து வகையான நடிப்பிலும் ரசிகர்களின் கைதட்டல்களைப் பெற்றார்.

மண்டேலா வெற்றி பெற்றது

மண்டேலா வெற்றி பெற்றது

யோகிபாபு கதாநாயகனாக மண்டேலா திரைப்படத்தில் நடித்திருந்தார். இப்படம் அரசியல் நைய்யாண்டி படமாக வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. திரையரங்கில் வெளியாகாமல், நேரடியாக தொலைக்காட்சியில் இந்தப் படம் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது.

வீரப்பனின் கஜானா ஃபர்ஸ்ட் லுக்

வீரப்பனின் கஜானா ஃபர்ஸ்ட் லுக்

இந்நிலையில், யோகி பாபு நடிக்கும் வீரப்பனின் கஜானா படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி உள்ளது. அந்த ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் தொப்பி , கூலிங் கிளாசுடன் டிடெக்டிவ் போல இருக்கிறார் யோகிபாபு. இந்தப் படத்தில் யோகிபாபு, மொட்டை ராஜேந்திரன், ராஜேஷ், தேவா, பூஜா, ஜீவிதா உள்ளிட்டோர் நடிக்கின்றனர். இந்த போஸ்டரை இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷும், தயாரிப்பாளர் தாணுவும் தங்களது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டனர். ராட்சசி படத்தை இயக்கிய கௌதம்ராஜ் இப்படத்தை இயக்க உள்ளார். ஃபோர் ஸ்கொயர்ஸ் ஸ்டுடியோஸ் சார்பில் பிரபாதீஸ் ஷாம்ஸ் தயாரிக்கிறார்.

20க்கும் மேற்பட்ட படங்களில்

20க்கும் மேற்பட்ட படங்களில்

விஜய்யுடன் பீஸ்ட் திரைப்படத்திலும், அண்ணாத்த திரைப்படத்திலும் நடித்து வருகிறார். மேலும், வலிமை, அரண்மனை3, சைத்தான்கே பச்சா, சதுரங்கவேட்டை 2, டாக்டர், அயலான்,சுந்தரா டிராவல்ஸ், காசேதான் கடவுளாடா என கிட்டத்தட்ட 20க்கும் மேற்பட்ட திரைப்படங்களை கையில் வைத்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X