86 வயதில் மீண்டும் நடிக்கிறாரா கவுண்டமணி.. யோகி பாபு வெளியிட்ட போஸ்ட்டை பாருங்க!
சென்னை: நடிகர் சிவகார்த்திகேயன் படத்தில் ஒரு கதாபாத்திரத்தில் நடிக்க கவுண்டமணியுடன் பேச்சுவார்த்தை நடைபெற்றதாக சில ஆண்டுகளுக்கு முன்னதாக தகவல்கள் வெளியானது. ஆனால், கவுண்டமணி அந்த படத்தில் நடிக்கவில்லை என்றும் வயது மூப்புக் காரணமாக அவர் தொடர்ந்து ஓய்வில் இருந்து வருகிறார் என்றும் தகவல்கள் வெளியாகின.
இந்நிலையில், யோகி பாபுவுடன் ஒரு படத்தில் கவுண்டமணி நடித்து வருகிறாரா என்கிற சந்தேகத்தை யோகி பாபுவின் லேட்டஸ்ட் இன்ஸ்டாகிராம் போஸ்ட் ஏற்படுத்தியுள்ளது.

சுந்தர். சி இயக்கத்தில் உருவாகும் புதிய படத்தில் கவுண்டமணி நடிக்கிறாரா என்றும் அல்லது ரவி மோகன் இயக்கத்தில் யோகி பாபு ஹீரோவாக நடித்து வரும் படத்தில் நடிக்கிறாரா என்றும் கேள்விகள் கிளம்பி உள்ளன.
காமெடி ஜாம்பவான்: ஒரு வாழைப் பழத்தை வைத்துக் கொண்டும், பெட்டர்மாக்ஸ் லைட்டை வைத்துக் கொண்டு பல வருடங்கள் நீடித்து நிலைத்து ரசிகர்களை எப்போதுமே சிரிப்பில் ஆழ்த்த முடியும் என்கிற வித்தையை பல ஆண்டுகளுக்கு முன்பே தமிழ் சினிமாவில் நிகழ்த்தி காட்டிய காமெடி ஜாம்பவான் கவுண்டமணிக்கு 86 வயதாகிறது.
86 வயதில் மீண்டும் நடிக்கிறாரா?: கவுண்டமணியுடன் இருக்கும் புதிய புகைப்படத்தை "வெல்வட்டா வெல்வட்டா" பாடலுடன் கலந்து யோகி பாபு சற்றுமுன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளார். சுந்தர். சி இயக்கத்தில் கவுண்டமணி மீண்டும் நடிக்கிறாரா என்றும் அல்லது ரவி மோகன் இயக்கத்தில் யோகி பாபு ஹீரோவாக நடித்து வரும் 'An Ordinary Man' படத்தில் நடித்து வருகிறாரா என்கிற கேள்விகளை எழுப்பி உள்ளனர்.
கவுண்டமணியை சந்தித்த யோகி பாபு: அல்லது கவுண்டமணியை அவரது வீட்டுக்கே சென்று பார்த்து நலம் விசாரித்துள்ளாரா யோகி பாபு என்றும் ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர். பெரிய சஸ்பென்ஸ் உடன் யோகி பாபு வெளியிட்டுள்ள இந்த புகைப்படம் தற்போது சோஷியல் மீடியாவில் தீயாக பரவி வருகிறது. ஏற்கனவே கவுண்டமணி மற்றும் யோகி பாபு இணைந்து ஒத்த ஓட்டு முத்தையா படத்தில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது. மீண்டும் கவுண்டமணி சினிமாவில் நடித்தால் ரசிகர்களுக்கு அது வேறலெவல் ட்ரீட்டாக இருக்கும் என்பதே பலரது கருத்தாக உள்ளது.


Click it and Unblock the Notifications











