என்னங்க இது... புகைப்பட கலைஞராக மாறிய அஜித்... புகைப்படம் வெளியிட்ட யோகி பாபு

சென்னை : நடிகர் அஜித்தின் வேதாளம் கடந்த 2015ல் வெளியாகி 100 கோடிக்கும் மேல் வசூலை குவித்த படம்.

அஜித் மற்றும் அவரது தங்கையாக வரும் லஷ்மி மேனன் இந்த படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தனர்.

இந்நிலையில் அந்த படத்தின் படப்பிடிப்பின்போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை யோகிபாபு தன்னுடைய ட்விட்டரில் வெளியிட்டுள்ளார்.

சிறப்பான நடிப்பு

சிறப்பான நடிப்பு

நடிகர் அஜித், லஷ்மி மேனன், யோகி பாபு, சூரி, ஸ்ருதிஹாசன் ஆகியோர் லீட் கதாபாத்திரங்களில் நடித்து கடந்த 2015ல் வெளிவந்த படம் வேதாளம். அஜித் மற்றும் லஷ்மி மேனன் அண்ணன், தங்கையாக மாறுபட்ட நடிப்பை இந்த படத்தில் வெளிப்படுத்தியிருந்தனர்.

அனிருத் இசை

அனிருத் இசை

பாக்ஸ் ஆபீசிலும் 100 கோடிக்கும் மேலாக கலெக்ஷனை இந்த படம் குவித்தது. சிவா டைரக்ஷனில் ஏஎம் ரத்தினம் படத்தை தயாரித்திருந்தார். அனிருத் படத்திற்கு இசையமைத்திருந்தார். படத்தில் யோகி பாபு மற்றும் மொட்டை ராஜேந்திரனும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.

வெளியிட்ட யோகி பாபு

வெளியிட்ட யோகி பாபு

இந்நிலையில் அந்த படத்தின் படப்பிடிப்பின்போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை காமெடி நடிகர் யோகி பாபு தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அந்த புகைப்படத்தில் அஜித், யோகி பாபு மற்றும் மொட்டை ராஜேந்திரனை விலைமிகுந்த கேமராவில் புகைப்படம் எடுக்கிறார்.

சிரித்தபடி போஸ்

சிரித்தபடி போஸ்

மேலும் யோகி பாபு மற்றும் மொட்டை ராஜேந்திரன் சிரித்தபடி அவருக்கு போஸ் கொடுக்கின்றனர். நடிகர் அஜித் கார் ரேஸ் உள்ளிட்ட பல்வேறு திறமைகளை கொண்டவர். அவரது போட்டோகிராபிக்கான ஆர்வமும் இந்த புகைப்படத்தின் மூலம் வெளிப்படுகிறது. ஒரு செயலை செய்வதற்கு ஆர்வம் மட்டும் இருந்தால் போதுமானது என்பதற்கு 'தல' சிறப்பான உதாரணம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X