சுந்தர் சி. விஜய்க்கு சொன்னது யோகிபாபுவுக்கும் பொருந்தும்
Recommended Video
சென்னை: யோகிபாபுவின் கெரியர் போகும் போக்கை பார்த்தால் இயக்குநர் சுந்தர் சி. ஒரு தீர்க்கதரிசி என்பது புரிகிறது.
சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்து வந்த யோகிபாபு இன்று கோலிவுட்டின் பிசியான இல்லை இல்லை படு பிசியான நகைச்சுவை நடிகர். காமெடியன் என்பதை தாண்டி தற்போது ஹீரோவாகவும் நடித்து வருகிறார்.
ஹீரோவான கையோடு அவர் டூயட் பாடவும் ஆசைப்படுவதாக கூறப்படுகிறது. அது தப்பில்லை.

ஹீரோ
காமெடியன்கள் ஹீரோவாக புரமோஷன் பெறுவது ஒன்றும் புதிது அல்ல. ஆனால் அந்த காமெடியன்கள் ஹீரோவான பிறகு மீண்டும் காமெடி பண்ண மாட்டேன் என்று அடம் பிடித்து கெரியரை நாசமாக்கிக் கொள்வதும் காலம் காலமாக நடந்து வருகிறது.

யோகி பாபு
யோகிபாபு ஹீரோவாகியது தவறு இல்லை. ஆனால் அவர் இனிமேல் நடித்தால் ஹீரோவாக மட்டுமே நடிப்பேன் என்று அடம்பிடிக்காமல் இருக்க வேண்டும். தற்போது அவர் காமெடி பண்ண நாள் ஒன்றுக்கு ரூ. 5 லட்சம் சம்பளம் வாங்குகிறார்.

படங்கள்
நாம் தான் ஹீரோவாகிவிட்டோமே சொந்தப் பணத்தை போட்டு படம் தயாரித்து தொடர்ந்து ஹீரோவாகவே நடிக்கலாம் என்று யோகிபாபு முடிவு செய்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை. காரணம் அது போன்று தற்போது ஒருவர் செய்து கொண்டிருக்கிறார். அவர் வழியில் யோகிபாபு செல்லாமல் இருந்தால் நன்றாக சம்பாதிக்கலாம்.

சுந்தர் சி.
நம்மாளுக ஒரு நல்ல ஆர்டிஸ்ட்டை ஆர்டிஸ்ட்டாக இருக்க விட மாட்டாங்க. அவங்களுக்கு எது எல்லாம் தேவை இல்லையோ அதில் எல்லாம் கூட்டிட்டு போய் அவங்களின் வாழ்க்கையை காலி பண்ணுவாங்க. கொஞ்ச நாளாவது காமெடி பண்ணி நல்லா சந்தோஷமாக இருங்க விஜய். நல்லா சம்பாதித்துவிட்டு அதன் பிறகு ஹீரோவாகி பணத்தை தொலைக்கலாம் என்று நட்பே துணை ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் சுந்தர் சி. எருமசாணி விஜய்க்கு அறிவுரை வழங்கினார். அது யோகிபாபுவுக்கும் பொருந்தும்.


Click it and Unblock the Notifications











