முதல்ல விஜய்... அப்புறம் அஜித்... இப்போ சிம்பு... யோகி பாபு காட்டுல மழை!
சென்னை: சிம்புவுடம் முதல் முறையாக ஜோடி சேருகிறார் காமெடி நடிகர் யோகி பாபு.
தமிழ் சினிமா மிகவும் பிஸியாக நடித்துக் கொண்டிருப்பவர் யோகி பாபு. விஜய்யுடன் சர்கார், அஜித்துடன் விஸ்வாசம், சிவகார்த்திகேயனின் 13வது படம் என முன்னனி நடிகர்களுடன் தொடர்ந்து நடித்து வருகிறார்.

சூர்யாவுடன் தானா சேர்ந்த கூட்டம் படத்திலும் யோகி பாபு நடித்திருந்தார். விஜய் சேதுபதியுடன் ஏற்கனவே ஆண்டவன் கட்டளை, ஜுங்கா ஆகிய படங்களில் நடித்த அவர், தற்போது கடைசி விவசாயி படத்திலும் நடித்து வருகிறார்.
இந்நிலையில் சிம்பு நடித்து வரும் புதிய படத்தை சுந்தர்.சி இயக்குகிறார். இப்படத்தின் படபிடிப்பு ஐதராபாத்தில் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. சிம்புக்கு ஜோடியாக மேகா ஆகாஷ், கேத்ரின் தெரசா ஆகியோர் நடிக்கின்றனர்.
தெலுங்கில் ஹிட்டான அட்டரின்டிகி தாரேடி தமிழ் ரீமேக் தான் இந்த படம். இதில் புதிய விஷயம் என்னவென்றால், இப்படத்தில் நடிக்க யோகி பாபு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இதனால் ரசிகர்களிடையே இப்படத்தின் எதிர்பார்ப்பு இன்னும் அதிகமாகி இருக்கிறது.


Click it and Unblock the Notifications











