மகளுக்காக போராடும் தந்தை வேடத்தில் யோகிபாபு… விரைவில் ரிலீசாகும் பொம்மை நாயகி
சென்னை : நடிகர் யோகி பாபு லீட் கதாபாத்திரத்தில் நடித்துள்ள பொம்மை நாயகி படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது.
இந்தப் படத்தில் மகளுக்காக போராடும் தந்தை வேடத்தில் யோகி பாபு நடித்துள்ளார்.
பா ரஞ்சித் தனது நீலம் புரொடக்ஷன்ஸ் சார்பில் படத்தை தயாரித்துள்ளார்.

நடிகர் யோகி பாபு
நடிகர் யோகி பாபு சிறப்பான பல்வேறு கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். இவரது டைமிங் காமெடி ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது. முக்கிய ஹீரோக்களுடன் கூட்டணி சேர்ந்து நடித்து வருகிறார் யோகி பாபு. குறிப்பாக இவர் இல்லாத படங்களே இல்லை என்னும்படியாக இவர் தற்போது கோலிவுட்டின் முக்கிய காமெடியனாக நடித்து வருகிறார்.

ஹீரோவாக யோகிபாபு
தன்னுடைய கேரக்டர் சிறியதாக இருந்தாலும் சிறப்பானதாக மாற்றிக் கொள்ளும் திறமை கொண்டவராக உள்ளார் யோகிபாபு. மேலும் காமெடியனாக மட்டுமின்றி ஹீரோவாகவும் சில படங்களில் நடித்து பெயர் பெற்று வருகிறார். இவரது நடிப்பில் கூர்க்கா, மண்டேலா உள்ளிட்ட படங்கள் வெளியாகி ரசிகர்களிடையே சிறப்பான வரவேற்பை பெற்றுள்ளது.

மண்டேலா படம்
குறிப்பாக மண்டேலா படத்திற்காக இவர் விமர்சனரீதியாக பாராட்டுக்களை பெற்றுள்ளார். சர்வதேச அளவில் விருதுகளையும் பெற்று வருகிறார். இந்நிலையில் இயக்குநர் பா ரஞ்சித் தயாரிப்பில் பொம்மை நாயகி என்ற படத்தில் இவர் நடித்துள்ளார். இந்தப் படத்தின் சூட்டிங்கை சமீபத்தில் நிறைவு செய்த படக்குழு கேக் வெட்டி கொண்டாட்டத்தில் ஈடுபட்டது.

பொம்மை நாயகி படம்
இந்த கொண்டாட்டத்தின் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாக்கப்பட்டது. இந்தப் படத்தை அறிமுக இயக்குநர் ஷான் இயக்கியுள்ளார். பா ரஞ்சித்தின் நீலம் புரொடக்ஷன்ஸ் சார்பில் இந்தப் படம் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்தப் படம் வித்தியாசமான கதைக்களத்துடன் உருவாக்கப்பட்டுள்ளது.

படப்பிடிப்பு நிறைவு
படத்தின் படப்பிடிப்பு கடந்த ஆண்டில் துவங்கப்பட்டு, தொடர்ந்து கன்னியாகுமரியையொட்டிய பகுதிகளில் படப்பிடிப்பு நடத்தப்பட்டது. தற்போது படப்பிடிப்பு நிறைவு பெற்று போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. படத்தில் சுபத்ரா, எஸ்எம் குமார். ஹரி, ஜெயச்சந்திரன் உள்ளிட்டவர்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

தந்தையாக யோகிபாபு
படத்தில் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளான மகளுக்காக போராடும் ஒரு தந்தையின் கேரக்டரில் யோகிபாபு நடித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. இத்தகைய கதாபாத்திரத்தை முதல் முறையாக அவர் ஏற்று நடித்துள்ளார். அப்பாவாக யோகிபாபு நடிக்க மகளாக சூப்பர் சிங்கர் புகழ் ஸ்ரீமதி நடித்துள்ளார். விரைவில் படத்தின் ரிலீஸ் குறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











