மூன்று மொழிகளில் வெளியாகிறது..யோகி பாபுவின் தர்மபிரபு!

சென்னை : யோகி பாபு நடித்த 'தர்மபிரபு' திரைப்படம் தெலுங்கு, மலையாளம் , கன்னடம் மொழிகளில் சாட்டிலைட் வழியாகவும் ஒடிடி தளம் மூலமாகவும் வெளியாக உள்ளது.

யோகி பாபு நடித்து சென்ற ஆண்டு தமிழில் வெளியான 'தர்மபிரபு' வித்தியாசமான கதைக் களத்தில் வயிறு குலுங்க சிரிக்க வைத்த படம். பரவலான வசூல்கள், பார்ப்பவர்கள் மத்தியில் விசில்கள் என்று அள்ளிக் கொண்ட படம். எமலோகத்தில், எமன் பதவி காலியாகிறது. அடுத்த எமன் யார்? புதிய எமனைத் தேர்ந்தெடுக்கும் தேர்தல் நடக்கிறது. வாரிசு அடிப்படையில் யோகிபாபுவும், அனுபவம் அடிப்படையில் சித்ரகுப்தனாக உள்ள கருணாகரனும் போட்டியிடுகிறார்கள்

இவர்களில் யார் எமன் பதவியைப் பெறப்போகிறார்கள்? ஆட்சியைப் பிடித்தது மட்டுமல்லாது, தன் தகுதியை எப்படி நிரூபித்துக் கொள்ளப் போகிறார்கள்? என்பதைக் காட்சிகளாக்கி கலகலப்பாகச் சொல்வதே 'தர்மபிரபு' படத்தின் திரைக்கதை. இப்படம் தெலுங்கு , மலையாளம், கன்னட மொழிகளில் மொழிமாற்றுப் படமாக உருவாகியுள்ளது.சாட்டிலைட் வழியாகவும்

Yogi Babu starrer Dharma Prabhu has been released in 3 languages.

ஸ்ரீவாரி பிலிம் நிறுவனம்

இந்தக் கொரோனாவின் லாக்டவுன் காலத்தில் சாட்டிலைட் வழியாகவும் ஓடிடி மூலமும் வெளியிடப்படவுள்ளது. தமிழில் தயாரித்த தயாரிப்பாளர் பி ரங்கநாதனின் ஸ்ரீவாரி பிலிம் நிறுவனம் மூன்று மொழிகளிலும் இம்மொழிமாற்றுப் படங்களைத் தயாரித்துள்ளது. தெலுங்கில் வசனங்கள் , பாடல்களை எழுதி இருப்பவர் அட்ஷத் . கன்னடத்தில் வசனங்களுடன் பாடல்களையும் உமா எழுதியுள்ளார். மலையாளத்தில் வசனம் பாடல்களை நிஷாத் எழுதியுள்ளார்.

Yogi Babu starrer Dharma Prabhu has been released in 3 languages.

பிரமாண்ட கூட்டணி

எமனாக யோகிபாபு நடிக்க , எமனின் அப்பாவாக ராஜேந்திர பிரசாத் , சித்திரகுப்தனாக கருணாகரன், சிவனாக பிரம்மானந்தம் என நடித்திருக்கிறார்கள். இயக்கம் -முத்துக்குமரன், ஒளிப்பதிவு -மகேஷ் முத்துசாமி, இசை- ஜஸ்டின் பிரபாகரன்,எடிட்டர்- சான் லோகேஷ் என்று ஒரு பிரமாண்ட கூட்டணி இந்த படத்தில் வேலை செய்து உள்ளனர் .

சிரிக்க வைக்கும்

Yogi Babu starrer Dharma Prabhu has been released in 3 languages.

பல மொழிகளில் வெளியாகும் இந்த படம் கண்டிப்பாக நல்ல வசூலை பெற்று தரும் என்று தயாரிப்பாளர் வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது. யோகிபாபு ரசிகர்கள் இதை மிகவும் ஆனந்தமாக கொண்டாடி வருகின்றனர். இந்த லாக் டவுன் சமயத்தில் கண்டிப்பாக இந்த படம் நிறைய பாதிப்பை ஏற்படுத்தும் , வயிறு குலுங்க சிரிக்க வைக்கும் , சிந்திக்க வைக்கும் என்றும் படத்தின் குழு சொல்லி வருகிறது . நல்ல படங்களை தமிழ் ரசிகர்கள் மட்டும் அல்லாது அனைத்து மொழி ரசிகர்களும் கண்டிப்பாக பாராட்டுவார்கள் என்பது தான் நிதர்சனமான உண்மை. அந்த வகையில் இந்த படமும் பல மொழிகளில் வெற்றிபெறும் என்று பெரிதும் எதிர்பார்க்க படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X