அடுத்த மாதம் ரிலீசாகிறது சுனைனாவின் ’ட்ரிப்’.. சன் டிவி யூடியூபில் வெளியான மிரட்டல் டிரைலர்!
சென்னை: யோகி பாபு, சுனைனா, கருணாகரன் நடிப்பில் உருவாகி உள்ள ட்ரிப் படத்தின் டிரைலர் தற்போது வெளியாகி உள்ளது.
Recommended Video
டென்னிஸ் மஞ்சுநாத் இயக்கியுள்ள இந்த படத்தின் டிரைலர் தற்போது சன் டிவி யூடியூப் தளத்தில் வெளியாகி உள்ளது.
சுனைனா, யோகி பாபு, கருணாகரன், மொட்டை ராஜேந்திரன் உள்ளிட்டோர் நடிப்பில் ஹாலிவுட் பேய் பட ஸ்டைலில் படம் உருவாகி உள்ளது.

ட்ரிப் டிரைலர்
யோகி பாபு, சுனைனா மற்றும் கருணாகரன் நடித்துள்ள ட்ரிப் படத்தின் டிரைலரை தற்போது சன் டிவி தனது யூடியூப் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. இயக்குநர் டென்னிஸ் மஞ்சுநாத் இயக்கத்தில் உருவாகியுள்ள ட்ரிப் திரைப்படம் அடுத்த மாதம் ரிலீசாக உள்ளது.

மிரட்டும் சுனைனா
நடிகை சுனைனா வெப்சீரிஸ் ஒன்றில் சமீபத்தில் நடித்து அசத்தினார். அதனை தொடர்ந்து அவருக்கு பல படங்கள் வரிசை கட்டி வருகின்றன சமீபத்தில், கெளதம் மேனன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான எனை நோக்கிப் பாயும் தோட்டா படத்தில் முக்கியமான ரோல் செய்திருந்தார். மேலும், கடந்த ஆண்டு இறுதியில் வெளியான சில்லுக்கருப்பட்டி படம் அவருக்கு மிகப்பெரிய வரவேற்பை பெற்றுத் தந்துள்ளது. இந்நிலையில், தற்போது ஹாரர் காமெடி படமான ட்ரிப் படத்தில் லீடு ரோலில் நடித்துள்ளார்.

காமெடி பேய் படம்
தமிழ் சினிமாவில் காமெடி பேய் படங்கள் வரிசை கட்டி வந்து கொண்டே இருக்கின்றன. இந்த படமும் அது போன்ற ஒரு படமாகத்தான் தெரிகிறது. யோகி பாபு, கருணாகரன், மொட்டை ராஜேந்திரனை எல்லாம் வைத்து டெரர் படத்தை இயக்கினால் அவர்களே சிரித்து விடுவார்கள், முன்னதாக வெளியான டீசரில் இருந்த அளவுக்கு டிரைலரில் காமெடி இல்லை.

ராங் டர்ன்
ஹாலிவுட்டில் வெளியான ராங் டர்ன் போன்ற படங்களின் சாயலிலேயே இந்த படம் இருப்பதாக தெரிகிறது. இயக்குநர் டென்னிஸ் மஞ்சுநாத் வித்தியாசமான முயற்சியாக இந்த படத்தை இயக்கி உள்ளார் என்று தெரிகிறது. கொலைகாரன் என நினைக்கும் யோகி பாபு நான் ஒரு கார்ப்பென்டர் என சொல்லும் இடமும், பாகுபலி பிரபாஸ்னு எழுதி வைன்னு சொல்ற இடமும் சிரிப்பலை அடுத்த மாதம் 5ம் தேதி படம் ரிலீசாகிறது.


Click it and Unblock the Notifications











