Yogi Babu: சூர்யா, விஷால், ஜெயம் ரவி... யோகி பாபு மகள் பிறந்தநாள் விழாவில் குவிந்த பிரபலங்கள்!!

சென்னை: கோலிவுட்டின் டாப் காமெடி நடிகர் யோகி பாபு விஜய்யின் தளபதி 68 படத்தில் கமிட்டாகியுள்ளார்.

இதுதவிர மேலும் சில முன்னணி நடிகர்களின் படங்களிலும் யோகி பாபு நடித்து வருகிறார்.

இந்நிலையில் தனது மகளின் பிறந்தநாள் விழாவை பிரம்மாண்டமாக கொண்டாடியுள்ளார் யோகி பாபு.

 Yogi Babu: Suriya, Vishal, Jayam Ravi attended Yogi Babus daughters birthday party

அதில், சூர்யா, விஜய் சேதுபதி, விஷால், ஜெயம் ரவி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

யோகி பாபு மகள் பிறந்தநாள் விழாவில் பிரபலங்கள்
கோலிவுட்டின் முன்னணி காமெடி நடிகர்களில் ஒருவராக கலக்கி வருகிறார் யோகி பாபு. சின்ன சின்ன வேடங்களில் நடித்து வந்த யோகி பாபுவுக்கு அடுத்தடுத்து மிகப் பெரிய வாய்ப்புகள் கிடைத்தன. சூப்பர் ஸ்டார் ரஜினி, விஜய், அஜித், விஜய் சேதுபதி, சூர்யா, விஷால், கார்த்தி, ஜெயம் ரவி என முன்னணி ஹீரோக்களுடன் நடித்துள்ளார்.

 Yogi Babu: Suriya, Vishal, Jayam Ravi attended Yogi Babus daughters birthday party

யோகி பாபு 2020ம் ஆண்டில் மஞ்சு பார்கவி என்பவரை திருமணம் செய்திருந்தார். அதன்பிறகு அவர்களுக்கு பெண் குழந்தையும் பிறந்தது. இந்நிலையில் தனது மகளின் பிறந்தநாள் விழாவை பிரம்மாண்டமாக கொண்டாடியுள்ளார் யோகிபாபு. நேற்று மாலை நடைபெற்ற இந்த பிறந்தநாள் விழாவில், அரசியல் பிரமுகர்கள், முன்னணி நடிகர்கள், நடிகைகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

 Yogi Babu: Suriya, Vishal, Jayam Ravi attended Yogi Babus daughters birthday party

நடிகர்கள் சூர்யா, விஜய் சேதுபதி, கார்த்தி, விஷால், ஜெயம் ரவி, பார்த்திபன், இயக்குநர்கள் சுந்தர் சி, அமீர், விஜய், நடிகைகள் குஷ்பூ, ஐஸ்வர்யா ராஜேஷ், பாடகர் மனோ, அமைச்சர்கள் உதயநிதி, மா சுப்ரமணியன், எம்பி தயாநிதி மாறன், பிரேமலதா விஜயகாந்த் உள்ளிட்ட பலர் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.. அவர்களுடன் எடுத்துக்கொண்ட போட்டோவை யோகி பாபு தனது டிவிட்டரில் ஷேர் செய்துள்ளார்.

 Yogi Babu: Suriya, Vishal, Jayam Ravi attended Yogi Babus daughters birthday party

ஜெயம் ரவி தனது மனைவியுடன் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டது குறிப்பிடத்தக்கது. அதேபோல், சூர்யா யோகி பாபுவின் மகளை தூக்கி கொஞ்சிய போட்டோக்கள் இணையத்தில் வைரலாகின. இவர்கள் தவிர மேலும் பல பிரபலங்கள் யோகி பாபுவின் மகள் பிறந்தநாள் விழாவில் கலந்துகொண்டு வாழ்த்தியுள்ளனர். கோலிவுட்டின் ஒரு பாதியே யோகி பாபுவின் மகள் பிறந்தநாள் பார்ட்டியில் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X