திமிர் தானா வந்துச்சு: உண்மையை சொன்ன யோகிபாபு
சென்னை: திமிர் தானாக வந்ததாக நடிகர் யோகிபாபு தெரிவித்துள்ளார்.
முத்துக்குமரன் இயக்கத்தில் யோகி பாபு, ராதாரவி, ஜனனி ஐயர், சாம், மேக்னா நாயுடு, ரேகா உள்ளிட்டோர் நடித்துள்ள படம் தர்மபிரபு. இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது.
அந்த விழாவில் பேசிய யோகிபாபு சுவாரஸ்யமான விஷயங்களை தெரிவித்தார்.

திமிர்
தர்மபிரபு படத்தில் இரண்டு ஹீரோ. எமலோகத்தில் நான் ஹீரோ, பூலோகத்தில் சாம் ஹீரோ. என் கெட்டப் கம்பீரமானது. இந்த கெட்டப்பை போட்டு பாரு திமிர் வரும் என்றார் ரேகா மேடம். உண்மையாகவே, எமதர்மன் கெட்டப் போட்டால் செம திமிர் இருக்கிறது என்று தெரிவித்தார் யோகி பாபு.

யோகிபாபு
யோகி பாபு வெயிட் குறைந்து காணப்படுகிறார். ஹீரோவாக ஆகியுள்ளதால் அவர் தனது உடல் எடையை குறைத்துவிட்டாரோ என்று பேச்சு கிளம்பியது. ஆனால் அவர் உடல் எடை குறைய காரணம் வேறு.

உழைப்பு
யோகிபாபு ஓய்வில்லாமல் தூங்கக் கூட நேரம் இல்லாமல் நடித்து வருகிறார். சரியான ஓய்வு இல்லாமல் தான் ஆள் மெலிந்து கொண்டிருக்கிறாராம். இதை அவரே தெரிவித்துள்ளார். யோகிபாபு ஒல்லியானதை பார்த்து அவருக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டதோ என்று கூட பேசப்பட்ட நிலையில் உண்மை தெரிய வந்துள்ளது.

எமன்
இன்றைய தேதிக்கு கோலிவுட்டின் படுபிசியான நகைச்சுவை நடிகர் யோகிபாபு தான். பெரிய பெரிய நடிகர்கள் எல்லாம் எமதர்மராஜாவாக நடித்துள்ள நிலையில் யோகிபாபுவும் நடித்திருக்கிறார். படத்தை பார்ப்பவர்கள் முன்பு அதே கதாபாத்திரத்தில் நடித்தவர்களுடன் ஒப்பிடுவார்கள் என்று தெரிந்தும் ரிஸ்க் எடுத்துள்ளார் யோகிபாபு.


Click it and Unblock the Notifications











