சர்ப்ரைஸ் கொடுத்த சரவணா ஸ்டோர் அதிபர்.. கேக்கை ஊட்டிவிட்டு உருகிய யோகி பாபு!
சென்னை: தனக்கு சர்ப்ரைஸ் கொடுத்த சரவணா ஸ்டோர் அதிபர் சரவணனுக்கு நடிகர் யோகி பாபு டிவிட்டரில் நன்றி தெரிவித்துள்ளார்.
தமிழ் சினிமாவின் முன்னணி நகைச்சுவை நடிகர்களில் ஒருவர் யோகி பாபு. கடந்த 22ஆம் தேதி தனது 36வது பிறந்தநாளை கொண்டாடினார் யோகி பாபு.
அவருக்கு சினிமா பிரபலங்களும் ரசிகர்களும் வாழ்த்து தெரிவித்தனர். இந்நிலையில் யோகி பாபுவின் பிறந்த நாளில் சரவணா ஸ்டோர் அதிபர் அவருக்கு சர்ப்ரைஸ் கொடுத்த விஷயம் வெளியாகியுள்ளது.

சரவணன் ஹீரோவாக
அதாவது, சரவணா ஸ்டோர்ஸ் உரிமையாளர் சரவணன் ஹீரோவாக அறிமுகமாகும் படத்தின் படப்பிடிப்பு சென்னையில் நடந்து வருகிறது. இந்தப் படப்பிடிப்பில் கேக் வெட்டி யோகி பாபுவின் பிறந்தநாளை கொண்டாடினர்.

மேலும் சில போட்டோக்கள்
கேக் வெட்டி கொண்டாடிய போட்டோக்கள் நேற்று இணையத்தில் வெளியாகி வைரலானது. இந்நிலையில் மேலும் சில போட்டோக்களை நடிகர் யோகி பாபு தனது டிவிட்டர் பக்கத்தில் ஷேர் செய்துள்ளார்.

ஊட்டிவிட்ட சரவணன்
அதில் சரவணா ஸ்டோர் அதிபருக்கு யோகி பாபு கேக் ஊட்டி விடுகிறார். யோகி பாபுவுக்கு சரவணா ஸ்டோர் அதிபர் கேக் ஊட்டி விடுகிறார். இந்த போட்டோக்களை தனது டிவிட்டர் பக்கத்தில் ஷேர் செய்துள்ள யோகி பாபு, சர்ப்ரைஸுக்கு நன்றி சார் என பதிவிட்டுள்ளார்.

சென்னையில் படப்பிடிப்பு
இந்த போட்டோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. சரவணா ஸ்டோர்ஸ் உரிமையாளர் சரவணன் ஹீரோவாக அறிமுகமாகும் படத்தின் படப்பிடிப்பு சென்னையில் நடந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











