கவுதம் மேனனுக்கு நன்றி சொன்ன யோகிபாபு...எதுக்கு தெரியுமா ?
சென்னை : தமிழ் சினிமாவில் ஹீரோக்களுக்கு இணையாக பிஸியாக இருக்கும் காமெடியன் என்றால் அது யோகிபாபு தான். ஹீரோவாகவும், காமெடியனாகவும் நடிக்கும் படங்கள் என கிட்டதட்ட 12 படங்களை கைவசம் வைத்துள்ளார்.
பரியோறும் பெருமாள், கர்ணன், மண்டேலா என பல படங்களில் தனது திறமையை நிரூபித்து, வரிசையாக ஹிட் கொடுத்து வருகிறார் யோகிபாபு. அதிகம் எதிர்பார்க்கப்படும் படங்களான விஜய்யின் தளபதி 65, அஜித்தின் வலிமை உள்ளிட்ட பல முக்கிய படங்களில் நடிப்பதால் யோகிபாபுவின் மவுசு கோலிவுட்டில் இன்னும் கூடி உள்ளது.

யோகிபாபுவை பாராட்டிய கவுதம் மேனன்
சமீபத்தில் யோகிபாபுவின் நடிப்பை, டைரக்டர் கவுதம் மேனன் ட்விட்டரில் பாராட்டி இருந்தார். மண்டேலா படத்தை பார்த்து விட்டு யோகிபாபுவின் நகைச்சுவை நடிப்பை பாராட்டிய அவர், விரைவில் அவருடன் இணைந்து பணியாற்ற காத்திருப்பதாக தெரிவித்திருந்தார்.

நன்றி சொன்ன யோகிபாபு
இதற்காக யோகிபாபு தற்போது ட்விட்டரில் நன்றி தெரிவித்துள்ளார். விரைவில் இவர்களின் காம்போ இணையும் படம் பற்றிய அறிவிப்பு வெளியாகவும் வாய்ப்புள்ளது.

சிம்புவுடன் மீண்டும் கூட்டணி
கவுதம் மேனன் தற்போது சிம்புவை வைத்து நதிகளில் நீராடும் சூரியன் என்ற படத்தை இயக்கி வருகிறார். ஐசரி கணேஷின் வேல்ஸ் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிக்கும் இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைக்கிறார்.
Recommended Video

படுபிஸியான யோகிபாபு
இதே போன்று யோகிபாபு சலூன், பன்னிகுட்டி, அரண்மனை 3, டிக்கிலோனா, டாக்டர், கடைசி விவசாயி, வலிமை, தளபதி 65 உள்ளிட்ட பல படங்களில் வரிசையாக நடித்து வருகிறார்.

விரைவில் இணைய வாய்ப்பு
இதனால் இந்த படங்களின் வேலைகளை இருவரும் முடித்த பிறகு கால்ஷீட் அடிப்படையில் யோகிபாபு - கவுதம் மேனன் இணையும் படம் பற்றிய அறிவிப்பு வெளியிடப்படலாம் என கோலிவுட்டில் தகவல் பரவி உள்ளது.


Click it and Unblock the Notifications











