திடீர் திருமணம் செய்து கொண்ட யோகி பாபு.. ட்விட்டரில் டிரெண்டாகும் ஹாஷ்டேக்! வாழ்த்தும் பிரபலங்கள்!

Recommended Video

Yogi Babu Marriage Video | Yogi Babu | Yogi Babu- Manju Parkavi

சென்னை: தமிழ் சினிமாவின் தற்போதைய முன்னணி காமெடி நடிகர் யோகி பாபுவுக்கும் - மஞ்சு பார்கவி என்பவருக்கும் குல தெய்வம் கோயிலில் இன்று காலை திருமணம் நடைபெற்றுள்ளது.

திருமணம் குறித்து வரும் செய்திகளை மறுத்து வந்த யோகி பாபு, சொல்லாமல் கொள்ளாமல் இன்று காலை திடீரென திருமணம் செய்த புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு, திருமணம் நிறைவடைந்தது குறித்தும், மார்ச் மாதம் வரவேற்பு நிகழ்ச்சி குறித்தும் தெரிவித்துள்ளார்.

யோகி பாபுவுக்கு திருமணம் நடைபெற்ற செய்தி அறிந்ததும் ட்விட்டரில் #YogiBabu டிரெண்டாகி வருகிறது.

டும் டும் டும்

காமெடி நடிகர் யோகி பாபுவுக்கும் அவரது உறவுக்கார பெண்ணான மஞ்சு பார்கவிக்கும் இன்று காலை யோகி பாபுவின் குலதெய்வ கோயிலில் உறவினர்கள் சூழ திருமணம் நடைபெற்றது. வரும் மார்ச் மாதம் சென்னையில், சினிமா பிரபலங்கள் பங்கு பெறும் வரவேற்பு நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.

தளபதி விஜய்

பிகில் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய தளபதி விஜய், "கல்யாணத்துக்காவது கரெக்டா போயிருங்க யோகி, வீடு யாரு வேணும்னாலும் கட்டலாம். ஆனா, தாலி.... என" நகைச்சுவையாக பேசியிருந்தார். தற்போது விஜய் பேசிய வீடியோவை பகிர்ந்து விஜய் ரசிகர்கள், எப்படியோ திருமணத்திற்கு போய்ட்டீங்க போல எனக் கூறி வாழ்த்தி வருகின்றனர்

விஜய் ஃபேன்ஸ்

சர்கார் மற்றும் பிகில் படத்தில் தளபதி விஜய்யுடன் காமெடி நடிகர் யோகி பாபு நடித்துள்ள நிலையில், யோகி பாபுவுன் திருமண செய்தி அறிந்த தளபதி ரசிகர்கள் ட்விட்டரில் ஹாஷ்டேக்கை டிரெண்ட் செய்து மணமக்கள் யோகி பாபு மற்றும் மஞ்சு பார்கவியை வாழ்த்தி வருகின்றனர்.

கஸ்தூரி வாழ்த்து

யோகி பாபு தனது திருமணம் குறித்த அறிவிப்பை திருமண புகைப்படத்துடன் தனது ட்விட்டர் பக்கத்தில் தற்போது பகிர்ந்தார். அதற்கு கீழே கமெண்ட் பாக்ஸில் நடிகை கஸ்தூரி யோகி பாபுவுக்கு தனது திருமண வாழ்த்துக்களை பகிர்ந்துள்ளார். யோகி பாபுவின் ரசிகர்களும் தொடர்ந்து அவருக்கு திருமண வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

விவேக் வாழ்த்து

பிகில் படத்தில் யோகி பாபுவுடன் நடிகர் விவேக் காமெடியில் கலக்கி இருந்தார். இந்நிலையில், யோகி பாபுவின் திருமணம் குறித்த அறிவிப்பை அறிந்த நடிகர் விவேக், தனது ட்விட்டர் பக்கத்தில், "நண்பர் யோகிபாபுவின் மணவிழா இனிது நடை பெறவும், அந்த இணை பல்லாண்டு மகிழ் வாழ்வு வாழவும் வாழ்த்துகிறேன்!!" என வாழ்த்தியுள்ளார்.

சினிமா பிரபலம்

யோகி பாபுவின் திருமண விழாவில் சினிமா பிரபலமாக காமெடி நடிகர் கணேஷ் கலந்து கொண்டுள்ளார். யோகி பாபுவுடன் அவர் இருக்கும் புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. சினிமாவை தாண்டி இருவரும் நல்ல நண்பர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. யோகி பாபுவின் வரவேற்பு நிகழ்ச்சியில் பல சினிமா பிரபலங்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X