அதெல்லாம் இல்லைன்னாரே... குலதெய்வ கோயிலில் நடிகர் யோகிபாபு திடீர் திருமணம்

By

Recommended Video

Yogi Babu Marriage Video | Yogi Babu | Yogi Babu- Manju Parkavi

சென்னை: காமெடி நடிகர் யோகிபாபு திருமணம் அவரது குல தெய்வ கோயிலில் இன்று காலை நடந்தது.

தற்போதைய நிலையில் பிசி நடிகராக இருப்பவர் யோகிபாபு. அவர் கால்ஷீட்டுக்காக முன்னணி ஹீரோக்கள் கூட காத்திருக்க வேண்டிய நிலை.

அவர் நடிக்காத படங்களே இல்லை என்று சொல்லும் அளவுக்கு ஏகப்பட்ட படங்களில் நடித்து வருகிறார்.

திருமணத் தகவல்

திருமணத் தகவல்

இந்நிலையில் காமெடி நடிகர் யோகி பாபுவுக்கு திருமணம் முடிவாகியுள்ளதாக தகவல் வெளியானது. கடந்த சில மாதங்களாகவே யோகி பாபுவுக்கு திருமணம் என அடிக்கடி தகவல் பரவியது. கடந்த சில மாதங்களுக்கு முன் துணை நடிகை ஒருவருடன் யோகி பாபு இருக்கும் போட்டோ வைரலானது. ஆனால் போட்டோவில் இருக்கும் பெண்ணுக்கும் தனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று யோகி பாபு விளக்கம் அளித்திருந்தார்.

செல்பி புகைப்படம்

செல்பி புகைப்படம்

சம்பந்தப்பட்ட அந்தப் பெண் ஒரு துணை நடிகை. அவர், ஒரு படத்தின் ஷூட்டிங்கில் யோகி பாபுவுடன் அந்த செல்பியை எடுத்ததாகத் தெரிவித்ததால் பிரச்னை முடிந்தது. இந்நிலையில் அவருக்குத் திருமணம் நிச்சயமாகியிருப்பதாகப் பரபரப்பு தகவல் வெளியானது. இதனை நடிகர் யோகி பாபு உறுதி செய்ததாகவும், இது பெற்றோர் பார்த்து நிச்சயித்த திருமணம் என்றும் அவர் தெரிவித்ததாகவும் செய்திகள் வெளியாயின.

திருத்தணி கோயிலில்

திருத்தணி கோயிலில்

இதையடுத்து நடிகர் யோகி பாபு திருமணம் 5 ஆம் தேதி திருத்தணி முருகன் கோவிலில் எளிமையான முறையில் நடைபெறவுள்ளதாகவும் குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய உறவினர்கள் மட்டுமே இதில் பங்கேற்பார்கள் என்றும் அதற்காக ஏற்பாடுகளை இரண்டு குடும்பத்தினரும் செய்து வருவதாகக் கூறப்பட்டது.

ட்விட் டெலிட்

ட்விட் டெலிட்

இந்நிலையில் இதை யோகிபாபு ட்விட்டரில் மறுத்திருந்தார். என் திருமணம் பற்றி வந்த தகவல் தவறானது. என் திருமணம் பற்றி நானே அறிவிப்பேன். எனக்கு மணப்பெண் தேடிக் கொண்டிருக்கின்றனர். கண்டிப்பாக இந்த வருடம் திருமணம் நடக்கும். முடிவானதும் நானே அறிவிக்கிறேன் என்று கூறியிருந்தார். பின்னர் அந்த ட்விட்டை டெலிட் செய்திருந்தார்.

இன்று திருமணம்

இன்று திருமணம்

இந்நிலையில் நடிகர் யோகிபாபு திருமணம் இன்று காலை நடந்தது. மணமகள் பெயர் மஞ்சு பார்கவி. யோகிபாபுவின் குலதெய்வ கோவிலில் வைத்து இந்த திருமணம் நடைபெற்றது. இதில் நெருங்கிய சொந்தங்கள் மட்டுமே கலந்துகொண்டனர். மார்ச் மாதம் சென்னையில் வரவேற்பு நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X