"பிக் பாஸில்" யோகி பாபு, அஞ்சலி.. செம காமெடி ட்விட்ஸ்ட்டா இருக்கே!
Recommended Video
சென்னை: என்னாது, அஞ்சலியும், யோகி பாபுவும் பிக் பாஸ் 3 வீட்டிற்கு செல்கிறார்களா என்று வியந்தால் அங்க தான் இருக்கு ட்விஸ்ட்.
கிருஷ்ணன் ஜெயராஜ் இயக்கத்தில் யோகி பாபு, அஞ்சலி உள்ளிட்டோர் நடிக்கும் படத்திற்கு தான் பிக் பாஸ் என்று தலைப்பு வைத்துள்ளனர். மற்றபடி யோகி பாபு, ரேஷ்மா,அஞ்சலியும் பிக் பாஸ் 3 வீட்டிற்கு எல்லாம் செல்லவில்லை.

படத்தின் தலைப்பு குறித்து தயாரிப்பாளர் சினிஷ் கூறியதாவது: எங்கள் படத்திற்கு பிக் பாஸ் என்று தலைப்பு வைத்துள்ளோம். விரைவில் இதை அதிகாரப்பூர்வமாக வெளியிடுவோம். விலா நோகச் சிரிக்க வைக்கும் நகைச்சுவைக் காட்சிகளும், விறுவிறுப்பு குறையாத காட்சிகளும் நிறைந்த கதையாக இதை உருவாக்கியிருக்கிறார் இயக்குநர் கிருஷ்ணன் ஜெயராஜ்.
ஒரு படைப்பாளி என்ற வகையிலும், ரசிகன் என்ற முறையிலும் இந்தப் படம் எனக்கு பெருமகிழ்ச்சியைத் தருகிறது. ரசிகர்கள் முற்றிலும் மாறுபட்ட வேடத்தில் நடிகை அஞ்சலியை இந்தப் படத்தில் பார்க்கலாம். அஞ்சலியின் திரையுலக வாழ்க்கையில் திருப்புமுனையை இப்படம் ஏற்படுத்தும் என்றால் மிகையாகாது.
இதுவரை அஞ்சலி ஏற்று நடித்த வேடங்களிலிருந்து இந்த வேடம் எவ்வளவு மாறுபட்டது என்பதை படம் பார்க்கும்போது ரசிகர்கள் உணர்ந்து கொள்ளலாம். படத்தில் பங்கேற்கும் மற்ற சில முக்கிய கதாபாத்திரங்களில் நடிப்பவர்கள் குறித்தும் விரைவில் அறிவிக்க இருக்கிறோம் என்றார். இந்த படத்தில் யோகி பாபு, அஞ்சலி தவிர்த்து என்னம்மா ராமர், சுப்பு பஞ்சு, நிரோஷா, பிக் பாஸ் 3 புகழ் ரேஷ்மா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள்.
மேலும் பிக் பாஸ் 3 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ரேஷ்மாவும் நடிக்கிறார். பிக் பாஸ் படத்தில் அஞ்சலி யோகி பாபுவின் காதலியாக வருகிறார் என்பதை தவிர வேறு எந்த தகவலையும் தற்போதைக்கு வெளியிட முடியாது எனவும் தயாரிப்பாளர் சினிஷ் மறுத்துவிட்டார். யோகி பாபு ஹீரோவாகிவிட்டாலும் பிற ஹீரோக்களின் படங்களில் காமெடி செய்ய மாட்டேன் என்று அடம் பிடிக்காமல் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஏற்கனவே நயன்தாராவுடன் கோ கோ வில் ரொமான்ஸ் செய்தது போக தற்போது அஞ்சலி மற்றும் சுனேனாவுடன் ஒரு அறிவியல் படத்திலும் ரொமான்ஸ் செய்ய போகிறார் யோகிபாபு. மனுஷன் செம பிசி. எது எப்படியோ பிக்பாஸ் என்ற சொல் சின்னத்திரையை தாண்டி வெள்ளித்திரையிலும் உச்சரிக்கும் சொல் ஆகி விட்டது.


Click it and Unblock the Notifications











