விஜய் சேதுபதியின் பேச்சை கேட்ட அமீர்கான்.. பாலிவுட்டில் களமிறங்கும் யோகிபாபு.. அசர வைக்கும் பின்னணி

Recommended Video

Bigg Boss Movie : Yogi Babu Anjali Pairs | பிக் பாஸ் 3 வீட்டில் அஞ்சலியும், யோகி பாபுவும்

சென்னை: ஹாலிவுட் படம் ஒன்றின் ரீமேக்கில் காமெடி நடிகர் யோகிபாபு தற்போது நடிக்க உள்ளார்.

நடிகர் யோகிபாபு காட்டில் தற்போது மழை என்றுதான் கூற வேண்டும். வரிசையாக தமிழில் நிறைய படங்களில் யோகிபாபு நடித்து வருகிறார்.

அதிலும் தமிழில் இருக்கும் முன்னணி நடிகர்கள் எல்லோருடனும் யோகிபாபு நடித்துவிட்டார். இன்னும் முக்கிய ஹீரோக்கள் பலரின் படங்களில் யோகிபாபு கமிட் ஆகி வருகிறார்.

தர்பார்

தர்பார்

அதேபோல் யோகிபாபுவிற்கு ஹீரோ வேடங்கள் எல்லாம் வரிசையாக காத்து இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. முக்கியமாக தர்பார் படத்தில் யோகிபாபு நடித்துள்ளார். இந்த படம் பொங்கலுக்கு வெளியாகிறது. இதில் அவரின் பாத்திரம் அதிகம் எதிர்பார்க்கப்படுகிறது.

அடுத்து என்ன

அடுத்து என்ன

இந்த நிலையில் ஹாலிவுட் படம் ஒன்றின் ரீமேக்கில் நடிக்க யோகிபாபுவிற்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. 1994ம் ஆண்டு வெளியான ஹாலிவுட் படம் ஃபாரஸ்ட் கம்ப். இந்த படம் உலகம் முழுக்க பிரபலம்.

பெரிய வைரல்

பெரிய வைரல்

உலகில் வெளியான கிளாசிக் படங்களில் ஃபாரஸ்ட் கம்ப் மிக முக்கியமான படமாகும். இதை தமிழில் ரீமேக் செய்ய திட்டமிட்டு வருகிறார்கள். அதே சமயம் பாலிவுட்டில் இதை அமீர் கான் ரீமேக் செய்து வருகிறார்.

என்ன வாய்ப்பு

என்ன வாய்ப்பு

இந்த ஹாலிவுட் படத்தின், பாலிவுட் ரீமேக்கில் அமீர் கான் உடன் விஜய் சேதுபதி நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் விஜய்சேதுபதி பாத்திரம் என்னவென்று தெரியவில்லை.

யோகிபாபு நடிப்பு

யோகிபாபு நடிப்பு

இந்த ஃபாரஸ்ட் கம்ப் ரீமேக்கில்தான் தற்போது யோகிபாபு நடிக்கிறார். தமிழ் படங்களில் அவரின் நடிப்பை பார்த்து அமீர் கான் யோகிபாபுவை அழைத்து இருக்கிறார். இதற்கு பின் விஜய் சேதுபதியின் தீவிர ரெக்கமண்டேஷனும் முக்கிய காரணம் என்று கூறுகிறார்கள்.

செம பாஸ்

செம பாஸ்

பாலிவுட்டில் யோகிபாபு நடிக்க போகும் முதல் படமாகும் இது. பாலிவுட்டில் ஏற்கனவே சத்யராஜ், தனுஷ் போன்ற தமிழர்கள் கலக்கிக் கொண்டு இருக்கிறார்கள். தற்போது யோகிபாபுவும் அவர்களுடன் சேர இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X