உலக சாதனைக்கு ரெடியாகும் யோகி பாபு..ஒரே படத்தில் 11 கெட்டப்புகள்!

சென்னை: நகைச்சுவை நடிகர் யோகி பாபு, இதுவரை இல்லாத புதிய உலக சாதனை முயற்சியாக ஒரே படத்தில் 11 மாறுபட்ட வேடங்களில் நடிக்க உள்ளார்த. 9 லைட்ஸ் நிறுவனத்தின் சார்பில் சுரேஷ் முத்து பிரம்மாண்டமாகத் தயாரிக்கும் இப்படம் பான் இந்தியா படமாக தயாராகி வருகிறது.

தமிழ் சினிமாவில் உலகநாயகன் கமல் ஹாசன் 'தசாவதாரம்' படத்தில் 10 வேடங்களில் நடித்ததே மிகப்பெரிய சாதனையாக இதுவரை பேசப்பட்டு வருகிறது. தற்போது அந்த சதனை முறியடிக்கும் வகையில் நடிகர் யோகி பாபு 11 வேடங்களில் நடிக்கிறார். இயக்குனர் ஆர். கிஷோர் குமார் இயக்கத்தில் மெகா பட்ஜெட் காமெடி, ஆக்ஷன் மற்றும் த்ரில்லர் படமாக இப்படம் உருவாகி வருகிறது. இதில் கதையின் நாயகன் முதல் வில்லன் வரை மொத்தம் 11 விதமான கதாபாத்திரங்களையும் யோகி பாபுவே நடிக்கிறார். இதில் இரட்டையர் வேடங்களும் அடங்கும். இதுமட்டுமில்லாமல், ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் வெவ்வேறு மொழிகளைப் பேசி நடித்து இருக்கிறார்.

Yogi Babu New movie
Photo Credit:

என்னதான் கதை?: இந்திய ராணுவ ஹெலிகாப்டர் ஒன்று எதிர்பாராதவிதமாக விபத்துக்குள்ளாகிறது. அந்த ஹெலிகாப்டரின் விபத்துக்கான பின்னணியை அறிய, அதன் 'பிளாக் பாக்ஸை' தேடி ஒரு குழு புறப்படுகிறது. அந்த பிளாக் பாக்ஸை தேடும் பயணத்தில் ஹீரோ நாயகன் எதிர்கொள்ளும் ஆபத்துகளையும், சவால்களையும் சீட்டின் நுனிக்கே வரவழைக்கும் ஆக்ஷன் மற்றும் வயிறு குலுங்க வைக்கும் நகைச்சுவையுடன் ஒரு காமெடி பிடமாக இப்படம் உருவாக உள்ளது. இப்படத்தில் மலையாள நடிகை அதிதி ரவி, ரெடின் கிங்ஸ்லி, விடிவி கணேஷ், பஞ்சு சுப்பு, ஏ. வெங்கடேஷ் உள்ளிட்டோர் முக்கியமான நடித்துள்ளனர். இப்படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில், அடுத்த கட்ட படிப்புடிப்பு இங்கிலாந்து, கென்யா ஆகிய நாடுகளில் நடைபெற உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X