லாக்டவுன் முடியட்டும்.. வெயிட்டா வரப் போறாரு யோகி பாபு.. பா. ரஞ்சித்துடன் அப்படியொரு கூட்டணியாம்!

சென்னை: இயக்குநர் பா. ரஞ்சித் தயாரிப்பில் ஹீரோவாக யோகி பாபு நடிக்கப் போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

வெங்கட் பிரபுவின் உதவி இயக்குநராக இருந்த பா. ரஞ்சித், அட்டகத்தி படத்தின் மூலம் இயக்குநர் ஆனார்.

தற்போது, நீலம் புரொடக்‌ஷனை தொடங்கி பரியேறும் பெருமாள், இரண்டாம் உலகப் போரின் குண்டு உள்ளிட்ட பல படங்களை தயாரித்து வருகிறார்.

யோகக்கார யோகி பாபு

யோகக்கார யோகி பாபு

சந்தானத்திற்கு பிறகு தமிழ் சினிமாவின் முன்னணி காமெடி நடிகராக கலக்கி வருகிறார் நடிகர் யோகி பாபு. வருடத்திற்கு 30 முதல் 35 படங்களை நடித்துத் தள்ளி வந்த யோகி பாபு, திருமணம் ஆனவுடன் லாக்டவுன் ஏற்பட்டதால், மனைவியுடன் இந்த லாக்டவுனை மகிழ்ச்சியாக கழித்து வருகிறார்.

பா. ரஞ்சித் தயாரிப்பில்

பா. ரஞ்சித் தயாரிப்பில்

இயக்குநர் பா. ரஞ்சித் தயாரிப்பில் மாரி செல்வராஜ் இயக்கத்தில், கதிர், ஆனந்தி நடிப்பில் வெளியான பரியேறும் பெருமாள் படத்தில் யோகி பாபு நகைச்சுவை நடிகரையும் தாண்டி சிறந்த துணை நடிகராக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி தமிழ் ரசிகர்களின் பாராட்டுக்களை பெற்று இருந்தார்.

ஹீரோவாக

ஹீரோவாக

காமெடி நடிகராக ஒரு பக்கம் கலக்கினாலும், ஹீரோவாகவும் பல படங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார் யோகி பாபு. லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாராவுடன் கோலமாவு கோகிலா படத்தில் டூயட் பாடிய யோகி பாபுவுக்கு கூர்கா, தர்ம பிரபு உள்ளிட்ட படங்களில் ஹீரோவாக கலக்கி வருகிறார். விஜய், அஜித், ரஜினி உள்ளிட்ட சூப்பர்ஸ்டார் நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார்.

சூப்பர் கூட்டணி

சூப்பர் கூட்டணி

பரியேறும் பெருமாள் படத்தில் இரண்டாவது ஹீரோவாகவே நடித்திருப்பார் யோகி பாபு. இந்நிலையில், லாக்டவுனுக்கு பிறகு பா. ரஞ்சித் தயாரிப்பில் உருவாக உள்ள புதிய படமொன்றில் லீடு ரோலில் யோகி பாபு நடிக்க உள்ளதாக நெருங்கிய வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Recommended Video

Actor Yogi Babu supplied N95 Mask & Juice to Police | Chennai Police
பாக்ஸிங் படம்

பாக்ஸிங் படம்

தயாரிப்பாளராக நீலம் புரொடக்‌ஷனில் எவ்வளவு கண்ணும் கருத்துமாக இருக்கிறாரோ, அதே அளவுக்கு இயக்கத்திலும் முழு கவனத்தை செலுத்தி வருகிறார் பா. ரஞ்சித். ஆர்யா, மகிழ்திருமேனி நடிப்பில் வடசென்னையை மையமாக வைத்து உருவாகி வரும் பாக்ஸிங் படத்திற்காக நடிகர் ஆர்யா, சமீபத்தில் முரட்டுத்தனமான சிக்ஸ்பேக் வைத்த புகைப்படங்கள் வெளியாகி வைரலானது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X