பீஸ்ட் படத்துல விஜய்க்கு யோகி பாபுதான் ப்ரெண்ட்டாம்.... சூப்பரப்பு
சென்னை : தளபதி விஜய் நடிப்பில் உருவாகிவரும் அவரது 65வது படம் பீஸ்ட்.
படத்தின் சூட்டிங் வரும் ஜூலை 2ம் தேதி சென்னையில் துவங்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் படத்தில் காமெடி நடிகர் யோகி பாபுவின் கேரக்டர் தற்போது வெளியாகியுள்ளது.

பீஸ்ட் படம்
தளபதி விஜய் மற்றும் பூஜா ஹெக்டே லீட் கதாபாத்திரங்களில் நடித்துவரும் படம் பீஸ்ட். தளபதி 65 என்று பெயரிடப்பட்டிருந்த இந்த படத்தின் தலைப்பு மற்றும் 2 போஸ்டர்கள் கடந்த 22ம் தேதி அவரது பிறந்ததினத்தையொட்டி வெளியிடப்பட்டன.

ஜூலையில் துவக்கம்
நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகிவரும் இந்த படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு ஜியார்ஜியாவில் நடந்து முடிந்துள்ளது. இதையடுத்து கொரோனா பரவல் காரணமாக படத்தின் சூட்டிங் நிறுத்தி வைக்கப்பட்டது. இந்நிலையில் படத்தின் இரண்டாவது கட்ட படப்பிடிப்பு ஜூலையில் துவங்கவுள்ளது.

முதல்கட்ட சூட்டிங்
ஜூலை 2ம் தேதி படத்தின் சூட்டிங் சென்னையில் துவங்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதையொட்டி 1ம் தேதி படத்தின் நாயகி பூஜா ஹெக்டே சென்னை வரவுள்ளார். முதல்கட்டமாக விஜய் மற்றும் பூஜா ஹெக்டே பங்குபெறும் பாடல் காட்சிகள் படமாக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

விஜய்யின் ப்ரெண்ட்
இந்நிலையில் படத்தில் இணைந்துள்ள யோகி பாபு, விஜய்யின் ப்ரெண்டாக நடிக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக விஜய்யுடன் சர்க்கார், பிகில் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள யோகி பாபு, இந்த படத்தில் அவரது நண்பராக நடிக்கவுள்ளது கண்டிப்பாக சிறப்பான எண்டர்டெயின்மென்ட்டை அவரது ரசிகர்களுக்கு அளிக்கும் என்று எதிர்பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications











