இனிமே இப்படித்தானா.. மீண்டும் ஹீரோவாக களமிறங்கும் காமெடி நடிகர்!

சென்னை : நடிகர் யோகி பாபு காமெடி கலாட்டா செய்வதில் கைதேர்ந்தவர். தொடர்ந்து முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து வருகிறார்.

ஹீரோவாகவும் இவரை அடுத்தடுத்த படங்களில் பார்க்க முடிகிறது. மண்டேலா, கூர்க்கா உள்ளிட்ட படங்களில் இவரை ஹீரோவாக ரசிகர்கள் ஏற்றுக் கொண்டனர்.

இந்நிலையில் தற்போது மீண்டும் ஹீரோவாக யோகி பாபு களமிறங்கியுள்ளார். இந்தப் படத்தின் பூஜை நேற்றைய தினம் போடப்பட்டு சூட்டிங் துவங்கியுள்ளது.

நடிகர் யோகிபாபு

நடிகர் யோகிபாபு

நடிகர் யோகிபாபு கவுண்டர் காமெடியில் சிறப்பாக காணப்படுகிறார். சந்தானம் இல்லாத குறையை இவரது காமெடி கலாட்டக்கள் போக்கி வருகின்றன. ஆனால் தனக்கென ஒரு மேனரிசத்தை இவர் மேற்கொண்டு வருகிறார். தொடர்ந்து முன்னணி நடிகர்களுடன் காமெடி கலாட்டாக்களை செய்து வருகிறார்.

சிறப்பான உடல்மொழி

சிறப்பான உடல்மொழி

சமீபத்தில் பீஸ்ட் படத்திலும் முக்கியமான காமெடி கேரக்டரில் இவர் நடித்திருந்தார். இவரது உடல் மொழி, தலைமுடி உள்ளிட்டவை இவரை மற்ற காமெடி நடிகர்களிடம் இருந்து தனித்து காட்டி வருகிறது. இது மட்டுமில்லாமல் அடுத்தடுத்த படங்களில் ஹீரோவாகவும் நடித்து வருகிறார்.

வெற்றியை தந்த காமெடி நாயகன்

வெற்றியை தந்த காமெடி நாயகன்

இவர் நாயகனாக நடித்து வெளியான மண்டேலா, கூர்க்கா, தர்மபிரபு போன்ற படங்கள் இவருக்கு சிறப்பான வரவேற்பை பெற்றுத் தந்தன. இந்தப் படங்களின் கதை அமைப்பும் இவருக்கு ஏற்றாற்போல இருந்த நிலையில், படங்கள் நல்ல வெற்றியையும் தந்தது. வசூல்ரீதியாகவும் சிறப்பாக அமைந்தது.

நயன்தாராவிற்கு ஜோடி

நயன்தாராவிற்கு ஜோடி

இது மட்டுமில்லாமல் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் கோலமாவு கோகிலா படத்திலும் நயன்தாராவுடனே ஜோடியாக நடித்திருந்தார் யோகிபாபு. முன்னணி நடிகர்களுடன் அடுத்தடுத்த படங்களில் நடித்துவந்த யோகிபாபு தற்போது அதிகமாக ஹீரோ சப்ஜெக்ட்டில் கவனம் செலுத்தி வருகிறார். இதனால் இவரது காமெடி படங்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது.

மீண்டும் ஹீரோ

மீண்டும் ஹீரோ

இந்நிலையில் தற்போது மீண்டும் ஹீரோவாகவே இவர் களமிறங்கியுள்ளார். மெடிக்கல் மிராக்கல் என்ற இந்தப் படத்தின் பூஜை நேற்றைய தினம் போடப்பட்டு சூட்டிங் துவங்கியுள்ளது. படத்தில் அவருக்கு ஜோடி சேர்ந்துள்ளார் நடிகை தர்ஷா குப்தா. என்னது யோகிபாபுவுக்கு தர்ஷா குப்தா ஜோடியா என்று ரசிகர்கள் வாய் பிளக்கின்றனர்.

குறைந்த படங்களின் எண்ணிக்கை

குறைந்த படங்களின் எண்ணிக்கை

சமீப காலங்களில் யோகிபாபுவின் படங்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. இதற்கு காரணம் அவர், அதிகமாக ஹீரோ சப்ஜெக்டிற்கு முக்கியத்துவம் கொடுப்பதுதான் என்று பரவலாக பேசப்படுகிறது. இந்த விஷயத்தில் சந்தானத்தின் பாணியை அவர் பின்பற்றுவதாகவும் கூறப்படுகிறது. அவரை காமெடியனாக பார்க்கவே ரசிகர்கள் மிகுந்த ஆர்வம் காட்டுகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X