யோகி பாபுவின் புதிய அவதாரம்... இதுக்கும் சேர்த்து சம்பளம் கேட்பாரோ!
நடிகர் யோகி பாபு வசனகர்த்தாவாக மாறியுள்ளார்.
Recommended Video

சென்னை : பிரபல காமெடி நடிகர் யோகி பாபு ஒரு படத்துக்கு வசனம் எழுதுகிறார்.
தமிழ் சினிமாவின் முன்னணி காமெடி நடிகராக இருப்பவர் யோகி பாபு. ரிலீசாகும் எல்லா படங்களிலும் கட்டாயம் இவர் இருக்கிறார். இவர் பேசும் காமெடி டயலாக்குகளுக்கு தனி ரசிகர் கூட்டமே இருக்கிறது.

தற்போது கூர்க்கா, தர்மபிரபு உள்ளிட்ட படங்களில் யோகி பாபு கதையின் நாயகனாக நடித்து வருகிறார். அதற்கு தகுந்தாற்போல் தனது சம்பளத்தை ஒரு கோடி ரூபாயாக உயர்த்திவிட்டார். இதனால் சிறு தயாரிப்பாளர் இவரிடம் வருவதற்கே அஞ்சுகின்றனர்.
இந்நிலையில் யோகி பாபு புதிய அவதாரம் ஒன்றை எடுத்திருக்கிறார். தான் கதையின் நாயகனாக நடிக்கும் தர்மபிரபு படத்திற்கு யோகி பாபு தான் வசனம் எழுதுகிறார். இயக்குனரும், தயாரிப்பாளரும் கேட்டுக்கொண்டதற்கு இணைங்க, இதற்கு அவர் ஒப்புக்கொண்டிருப்பதாக தெரிகிறது.
காற்றுள்ள போதே தூற்றிக்கொள் என்ற பழமொழிக்கு ஏற்ப தனக்கு கிடைக்கும் வாய்ப்பை எல்லாம் பயன்படுத்திக்கொள்கிறார் யோகி பாபு. இதனால் அவர் வாங்கும் சம்பளத்துக்குள் வசனகர்த்தா பணியும், அடங்குமா அல்லது அதற்கு தனி ரேட்டா என கோலிவுட் வட்டாரங்கள் கிசுகிசுக்க தொடங்கியிருக்கின்றன.


Click it and Unblock the Notifications











