நீங்க அதுக்கு சரிப்பட்டு வரமாட்டீங்க யோகி பாபு.. தேவையில்லாம ரிஸ்க் எடுக்குறீங்க!

யோகி பாபு ஹீரோவாக நடிக்கும் காதல் மோதல் 50/50 படத்தின் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன.

சென்னை: புதிய படம் ஒன்றில் காமெடி ஆக்ஷன் ஹீரோவாக நடிக்கிறார் யோகி பாபு.

தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி காமெடியனாக இருப்பவர் யோகிபாபு. இவர் இல்லாத படங்களே இல்லை என்ற நிலை தான் நீடித்து வருகிறது. அந்த வகையில் யோகிபாபுவை மையமாக வைத்து தற்போது உருவாகி வரும் படம் "காதல் மோதல் 50/50". இது ஒரு ஆக்ஷன் கலந்த பேய் படம்.

Yogi Babu turns into a action hero

அலெக்சாண்டர் கதை எழுத பிரபல கன்னட திரைப்படமான "த்ரயா" வை இயக்கிய கிருஷ்ணா சாய் இயக்குகிறார். இப்படத்திற்கு தரண்குமார் இசை அமைத்துள்ளார். பிரதாப் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

இப்படத்தில் யோகிபாபுவிற்கென பிரத்யேக பிரம்மாண்டமான சண்டைக்காட்சிகளை ஸ்டண்ட் மாஸ்டர் பில்லா ஜெகன் அமைக்க உள்ளார்.

Yogi Babu turns into a action hero

தற்போது மு.மாறன் அவர்களின் இயக்கத்தில் உதயநிதிஸ்டாலின் அவர்களை நாயகனாக வைத்து தயார் ஆகி கொண்டிருக்கும் "கண்ணை நம்பாதே " என்ற படத்தின் தயாரிப்பாளர் திரு.வி.என்.ஆர் அவர்கள் இப்படத்தினை தன் நிறுவனம் லிபிசினி கிராப்ட்ஸ் மூலம் தயாரித்து வருகிறார்.

படத்தின் இறுதிகட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. விரைவில் இப்படத்தின் டீஸர் வெளியாக உள்ளது .

Yogi Babu turns into a action hero

ஏற்கனவே, தர்மபிரபு, கூர்க்கா ஆகிய படங்களில் யோகி பாபு ஹீரோவாக நடித்திருந்தார். ஆனால், அப்படங்கள் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை. தற்போது ரஜினியின் தர்பார் மற்றும் விஜய்யின் பிகில் படங்களிலும் முக்கிய காமெடி கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

இந்த சூழ்நிலையில் தான் மீண்டும் ஹீரோவாக, அதுவும் ஆக்சன் ஹீரோவாக யோகி பாபு நடிக்க இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X