நான் மறுபடியும் கவுண்டமணியாகனும்.. ஆசைப்படும் யோகி பாபு
சென்னை: நகைச்சுவை சக்கரவர்த்தி கவுண்டமணி நடித்த சுடலை கதாபாத்திரத்தில் நடிக்க ஆர்வமாக இருப்பதாக நடிகர் யோகி பாபு கூறியுள்ளார்.
தமிழ் சினிமாவில் ஒவ்வொரு நடிகருக்கும், அவர்கள் நடித்த ஏதோ ஒரு கதாபாத்திரம், வேறு யாரோடும் ஒப்பிட முடியாத வகையில் சிறப்பாக அமைந்திருக்கும். நடிகர் கவுண்டமணி அப்படி நடித்த பல வேடங்களில் ஒன்று, லக்கி மேன் படத்தில் அவர் நடித்த எமன் கதாபாத்திரம்

அந்த வகையில், எமன் கதாபாத்திரம் என்றாலே நம் நினைவுக்கு வருவது நடிகர் கவுண்டமணி தான். 1995-ம் ஆண்டு வெளியான லக்கி மேன் படத்தில் அவரது தோற்றத்தையும், தூம் தாதா என்ற வசனத்தையும், யாராலும் மறக்க முடியாது. குறிப்பாக 90ஸ் கிட்ஸ்க்கு.
கவுண்டமணிக்கு அடுத்து, ஒரு முழு நீள படத்தில் எமதர்ம ராஜாவாக நடிக்கும் வாய்ப்பு நடிகர் யோகி பாபுவிற்கு தான் அமைந்துள்ளது. தர்ம பிரபு படத்தில் அவர் எமதர்ம ராஜாவாக நடித்து வருவது அனைவரும் அறிந்ததே.

தற்போது மீண்டும் கவுண்டமணி நடித்த மற்றொரு கதாபாத்திரத்திலும் தான் நடிக்க விரும்புவதாக தெரிவித்துள்ளார் யோகி பாபு. 'அது ஒன்னா இருக்க கத்துக்கணும்’ படத்தில் கவுண்டமணி நடித்த வெட்டியான் கதாபாத்திரம். அந்த படத்தில் நகைச்சுவை மட்டுமின்றி, ஒரு குணசித்திர நடிகராகவும் சிறப்பாக நடித்திருப்பார் கவுண்டமணி.
யோகி பாபுவிடம் அவரது கனவு கதாபாத்திரம் என்னவென்று கேட்டபோது, அது ஒன்னா இருக்க கத்துக்கணும் படத்தில் கவுண்டமணி நடித்த சுடலை கதாபாத்திரமே தனது கனவு கதாபாத்திரம் எனவும், இதற்கான வாய்ப்பு கிடைத்தால் தயங்காமல் உடனே நடிப்பேன் எனவும் தெரிவித்துள்ளார்.

முழுநீள நகைச்சுவை படமாக உருவாகியுள்ள தர்ம பிரபு படத்தில் யோகிபாபு எமனாகவும், ராதாரவி அவருடைய தந்தையாகவும் நடிக்கிறார். நடிகை ஜனனி ஐயர் சிறப்புத் தோற்றத்தில் நடிக்கிறார்.
ரமேஷ் திலக் சித்திரகுப்தனாக நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், ஜூன் மாதம் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











