திருச்செந்தூர் முருகன் கோயிலில் வழிபாடு.. பிறந்தநாளுக்கு யோகிபாபு செய்த செம செயல்

சென்னை: கோலிவுட்டின் தவிர்க்க முடியாத காமெடி நடிகராக உருவெடுத்து இருக்கிறார் யோகிபாபு. லொள்ளு சபா நிகழ்ச்சியின் மூலம் சின்னத்திரையில் அறிமுகம் ஆகி பின்னர் வெள்ளி திரைக்கு வந்தவர். வெள்ளித்திரைக்கு வந்த புதிதில் அவருக்கு பெரிதாக எந்த வாய்ப்பும் இல்லை. ஒரு வழியாக யாமிருக்க பயமேன் படத்தில் அவர் ஏற்றிருந்த கதாபாத்திரம் பலராலும் ரசிக்கப்பட்டது.

தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகராக வலம் வந்துகொண்டிருக்கிறார் யோகிபாபு. அவரது கவுண்ட்டர்களும், டைமிங் சென்ஸும் ரசிகர்களை வெகுவாக சிரிக்க வைப்பவை.லொள்ளு சபாவின் மூலம் சின்னத்திரையில் அறிமுகமாகி பிறகு பெரிய திரைக்கு வந்தவர். ஆரம்பத்தில் சிறு சிறு வேடங்களில் நடித்துக்கொண்டிருந்த யோகிபாபு இப்போது இல்லாத படங்களே இல்லை என்று சொல்லலாம். முன்னணி ஹீரோக்கள் அனைவருடனும் நகைச்சுவை செய்துவிட்டார்.

Yogi Babu Tamil Cinema Kollywood


ஹீரோ: காமெடியன்கள் ஹீரோவாகும் கலாச்சாரம் தமிழ்நாட்டில் பெருகிவருகிறது. அதற்கு ஏற்றார் போல் நடிகர் யோகிபாபுவும் நெல்சன் திலீப்குமார் இயக்கிய கோலமாவு கோகிலா திரைப்படத்தில் லீடு ரோலில் நடித்தார். அதனைத் தொடர்ந்து மடோன் அஸ்வின் இயக்கிய மண்டேலா படத்திலும் ஹீரோவாக நடித்தார். இரண்டு படங்களுமே விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றன என்பது குறிப்பிடத்தக்கது.

மாவீரன், ஜெயிலர்: அதனை தொடர்ந்து அவர் நடித்த கூர்கா உள்ளிட்ட படங்கள் போதிய வரவேற்பைப் பெறவில்லை. ஹீரோவாக நடித்தாலும் காமெடி ரோலிலும் தொடர்ந்து நடித்துவருகிறார். அந்த வகையில் அவர் மாவீரன் மற்றும் ஜெயிலர் ஆகிய படங்களில் நடித்திருந்தார். மாவீரன் படத்தில் யோகிபாபுவின் டைமிங்கும் கவுண்ட்டர்களும் ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைத்தன. இப்படிப்பட்ட யோகிபாபுவை பார்த்து பல வருடங்கள் ஆகிவிட்டன என்றும் ரசிகர்கள் கொண்டாடினர். அதேபோல் ஜெயிலர் திரைப்படத்தில் ரஜினியுடனான காம்போவும் யோகிபாபுவுக்கு வொர்க் அவுட் ஆனது. நெல்சனின் டார்க் காமெடிக்கும் யோகி பாபு பக்காவாக செட்டானார்.

பிற மொழிகளிலும்: தமிழ் மட்டுமின்றி மலையாளம், ஹிந்தி உள்ளிட்ட மொழிகளிலும் பிஸியாக நடித்துவருகிறார் யோகிபாபு. அந்தவகையில் மலையாளத்தில் அவர் கடைசியாக குருவாயூர் அம்பல நடையில் படத்தில் நடித்திருந்தார். அதேபோல் ஹிந்தியிலும் தொடர்ந்து சில படங்களில் கமிட்டாகியிருப்பதாக கூறப்படும் யோகிபாபு; தமிழில் டஜன் கணக்கில் படங்களை வைத்திருக்கிறார்.

முருக பக்தர்: யோகிபாபு தீவிரமான முருக பக்தர் ஆவார். அதனால் தமிழ்நாட்டில் இருக்கும் திருச்செந்தூர், பழனி என புகழடைந்த முருகன் கோயில்கள் முதற்கொண்டு சிறிய முருகன் கோயில்கள்வரை சென்றுவருவது அவரது வழக்கம். அந்தவகையில் நேற்று தனது பிறந்தநாளை கொண்டாடிய யோகிபாபு முருகனை வழிபடுவதற்காக திருச்செந்தூருக்கு சென்றார். அப்போது அங்கிருந்தவர்கள் அவருடன் செல்ஃபி எடுத்துக்கொண்டனர். அந்த சமயத்தில் தூய்மை பணியாளர்களும் ஆசைப்பட; அவர்களை அழைத்து சிரித்தபடி போஸ் கொடுத்தார் யோகிபாபு. அந்த வீடியோ சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியுள்ளன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X