Yogi babu: யோகி பாபுவின் 'சட்னி - சாம்பார்' டீசர் வெளியானது.. நான் ஸ்டாப் காமெடி கொண்டாட்டம்!

சென்னை: ராதாமோகன் இயக்கத்தில் யோகிபாபு நடிக்கும் சட்னி சாம்பார் வெப் தொடரின் டீசர் வெளியாகி உள்ளது. வாணி போஜன், யோகிபாபு, நிதின் சத்யா உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் நிறுவனத்துடன் இணைந்து வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் சார்பில் ஐசரி கணேஷ் தயாரித்துள்ளார்.

தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகராக இருப்பவர் யோகிபாபு. ரஜினி, ஷாருக்கான், தனுஷ், அஜித், விஜய், சூர்யா என முன்னணி நடிகர்கள் படத்தில் காமெடி வேடத்திலும், சில திரைப்படங்களில் கதையின் நாயகனாகவும் நடித்து வருகிறார். யோகி பாபுவின் கைவசம் தற்போது டஜன் கணக்கிலான படங்கள் உள்ளன. அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடித்த 'ஜவான்' படத்தில் நடித்து பாலிவுட்டிலும் பிரபலமாகி விட்டார் யோகி பாபு.

Yogi babu

நிற்க கூட நேரம் இல்லாமல், படு பிஸியான நடிகராக இருக்கும் யோகி பாபு தற்போது சட்னி சாம்பார் என்ற புது வெப் தொடரில் நடித்துள்ளார். இந்தப் படத்தின் முதன்மைக் கதாபாத்திரங்களில் வாணி போஜன், யோகிபாபு, நிதின் சத்யா உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் நிறுவனத்துடன் இணைந்து வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் சார்பில் ஐசரி கணேஷ் தயாரித்துள்ளார்.

சட்னி சாம்பார் டீசர்: இத்தொடரின் டீசர் தற்போது வெளியாகி உள்ளது. அதில், யோகிபாபு அமுதா என்ற பெயரில் உணவகத்தை நடத்தி வருகிறார். இந்த கடையின் சாம்பாருக்கும், சட்னிக்கும் அப்பகுதி மக்கள் அடிமையாகி இருக்கிறார்கள். இந்த சட்னி, சாம்பாரின் தனிச்சுவைக்கான சூத்திரத்தை யாருக்கும் தெரியாமல் பாதுகாத்து வருகிறார் யோகிபாபு. அவருடன் இணைந்து தொழில் நடத்த ஆசைப்படுகிறார் நிதின் சத்யா. இதற்கு யோகிபாபு மறுப்பு தெரிவிக்க அதைத் தொடர்ந்து நடக்கும் விஷயங்கள் தான் தொடரின் கதையாக இருக்கும் என்று டீசரை பார்க்கும் போது தெரிகிறது.

Yogi babu

இயக்குநர் ராதா மோகன்: இந்த வெப் தொடரை ராதா மோகன் இயக்கி உள்ளார். இவர் 2007ம் ஆண்டு ஜோதிகா, பிரித்விராஜ், பிரகாஷ் நடித்த மொழி திரைப்படத்தை இயக்கினார். அந்த படம் மிகப்பெரும் அளவில் வெற்றி பெற்றது. அதைத் தொடர்ந்து,. திரிஷா நடிப்பில் அபியும் நானும் திரைப்படத்தை இயக்கினார். அப்பா மகளுக்கான உறவை இத்திரைப்படத்தில் அழகாக காட்சிப்படுத்தி இருந்தார். இப்படம் ராதா மோகனுக்கு சிறந்த இயக்குனருக்கான விருதை பெற்றுக்கொடுத்தது.

டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டார்: பீல் குட் திரைப்படத்தை எடுக்கும் ராதா மோகன் இயக்கத்தில் கடந்த ஆண்டு எஸ்.ஜே சூர்யா மற்றும் பிரியா பவானி ஷங்கர் நடிப்பில் பொம்மை திரைப்படம் வெளியானது. வித்தியாசமான கதை அம்சத்தைக் கொண்ட இப்படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. தற்பொழுது ராதா மோகன் சட்னி சாம்பார் என்ற வெப் தொடரை இயக்கியுள்ளார். டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டாரில் வெளியாகும் இந்த தொடரின் ரிலீஸ் தேதி குறித்த எந்த அறிவிப்பையும் படக்குழு இதுவரை வெளியிடவில்லை.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X