Lucky Man Trailer: லாரி ஏத்திட்டு ஸாரி கேட்டா ஒத்துப்பியா.. யோகி பாபுவின் ரகளையில் லக்கி மேன்!
சென்னை: இந்த ஆண்டு வாரிசு, மாவீரன், ஜெயிலர் என அடுத்தடுத்து காமெடியில் கலக்கி வரும் யோகி பாபு ஹீரோவாக நடித்துள்ள லக்கி மேன் திரைப்படத்தின் டிரெய்லர் தற்போது வெளியாகி டிரெண்டாகி வருகிறது.
மடோன் அஸ்வின் இயக்கத்தில் மண்டேலா படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்திய யோகி பாபு ஹீரோவாகவும் தொடர்ந்து பல படங்களில் நடித்து வருகிறார்.

இயக்குநர் பாலாஜி வேணுகோபால் இயக்கத்தில் யோகி பாபு, வீரா, ரேச்சல் ரெபேக்கா, ஆர்.எஸ். சிவாஜி உள்ளிட்டோர் நடித்துள்ள லக்கி மேன் டிரெய்லரில் இடம்பெற்ற காமெடி வசனங்கள் ரொம்பவே ஷார்ப்பாக உள்ளது ரசிகர்களை கவர்ந்துள்ளது.
மாவீரனில் மரண காமெடி: தமிழ் சினிமாவின் தற்போதைய நம்பர் ஒன் காமெடியனாக யோகி பாபு மாஸ் காட்டி வருகிறார். தமிழ்நாட்டில் தமிழனுக்கே வேலை இல்லை, வடமாநிலத்தவருக்குத்தான் வேலை கிடைக்கிறது என்பதை நய்யாண்டியுடன் மாவீரன் படத்தில் காமெடி டிராக்காக வைத்து ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைத்திருந்தார்.

அதிலும் பேட்ச் வொர்க் பண்றேன் என்கிற பெயரில் ஒரே வீட்டில் இத்தனை பேர் உட்கார்ந்து இருக்கீங்களே அப்படியே உடைத்துக் கொண்டால், கீழ் வீட்டுக்கு போயிடுவீங்கனு சொல்வதெல்லாம் குபீர் சிரிப்பை வரவழைத்து விட்டது.
ஜெயிலரில் பாரதியார் காமெடி: நெல்சன் இயக்கத்தில் வெளியான கோலமாவு கோகிலா, டாக்டர், பீஸ்ட் படங்களை தொடர்ந்து ஜெயிலர் படத்திலும் யோகி பாபு காமெடி டிராக்கில் ரசிகர்களை சிரிக்க வைத்திருந்தார். ரஜினிகாந்த் மீது கார் ஏற்ற பார்ப்பது, ரஜினிகாந்தை ஆரம்பத்தில் கலாய்ப்பது, பின்னர், யோகி பாபுவின் காரில் டெட் பாடியை ஏற்றி சூப்பர்ஸ்டார் அலற விடுவது. ஒவ்வொரு முறையும் யோகி பாபுவை காட்டும் போதெல்லாம் ஒரு பாரதியார் காமெடி என கலக்கி இருந்தார்.

லக்கி மேன் டிரெய்லர்: இந்நிலையில், யோகி பாபு ஹீரோவாக நடித்துள்ள லக்கி மேன் படத்தின் டிரெய்லர் சற்றுமுன் வெளியானது. குட் நைட் படத்தில் ரமேஷ் திலக்குக்கு ஜோடியாக நடித்த ரேச்சல் ரெபேக்கா இந்த படத்தில் யோகி பாபுவுக்கு ஜோடியாக நடித்துள்ளார்.
ஷான் ரோல்டன் இசையில் உருவாகி உள்ள லக்கி மேன் திரைப்படத்தில் பார்க்கிங் பிரச்சனை தான் மைய கரு என்பது தெரிகிறது. இதே பார்க்கிங் பிரச்சனையை வைத்து மேலும், சில படங்கள் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
லாரி ஏத்திட்டு ஸாரி சொல்லட்டா: வெளியே கோபத்தை காட்ட முடியாமல் வீட்டில் வந்து கோபத்தைக் காட்டத்தானே உங்களுக்கு பொண்டாட்டி என ஹீரோயின் யோகி பாபுவை பார்த்து கேட்கும் கேள்வியும், கடைசியில் உன் மேல லாரி ஏத்திட்டு ஸாரி கேட்டா சும்மா இருப்பியான்னு யோகி பாபு சொல்லும் காமெடி வசனமும் கவனம் ஈர்க்கின்றன. வரும் செப்டம்பர் 1ம் தேதி லக்கி மேன் படம் வெளியாகிறது.


Click it and Unblock the Notifications











