“அய்யய்யோ.. சத்தியமா அது நான் இல்லைங்க”... அலறும் யோகிபாபு!
துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் திமுக தலைவர் கருணாநிதி தொடர்பாக தான் டிவிட்டர் பதிவு வெளியிடவில்லை என காமெடி நடிகர் யோகிபாபு விளக்கமளித்துள்ளார்.
Recommended Video

சென்னை: துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் திமுக தலைவர் கருணாநிதி தொடர்பாக தன் பெயரில் டிவிட்டரில் வெளியான தகவல்கள் அனைத்தும் பொய்யானது என காமெடி நடிகர் யோகிபாபு தெரிவித்துள்ளார்.
அமீரின் யோகி படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் யோகி பாபு. தற்போது முன்னணி காமெடி நடிகராக வலம் வரும் அவர், தனது நூறாவது படமான அஜித்தின் விசுவாசம் பட ஷூட்டிங்கில் பிசியாக இருக்கிறார்.
இந்நிலையில் கடந்த இரண்டு தினங்களாக, டிவிட்டரில் யோகிபாபு பெயரில் தமிழ்நாடு துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் திமுக தலைவர் கருணாநிதி பற்றி அவதூறான செய்திகளில் வெளியானது. இதனை யோகிபாபு தான் வெளியிட்டாரா எனும் குழப்பம் நீடித்தது.

வீடியோ பதிவு:
இந்நிலையில் இதுதொடர்பாக வீடியோ பதிவு ஒன்றை யோகிபாபு வெளியிட்டுள்ளார். அதில் தனது பெயரில் போலி டிவிட்டர் கணக்கு தொடங்கிய சில விஷமிகளின் செயல்தான் இது என அவர் கூறியுள்ளார்.

நான் வெளியிடவில்லை:
இது தொடர்பாக மேலும் அந்த வீடியோவில் அவர் கூறியிருப்பதாவது, "கடந்த 2, 3 நாட்களாக டிவிட்டரில் எனது பெயரில் திமுக தலைவர் கருணாநிதி மற்றும் தமிழ்நாடு துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பற்றி செய்தி வெளியானது. அது நான் வெளியிட்டது அல்ல.

தவறான ஐடிக்கள்:
என் பெயரில் 5,6 ஃபேக் ஐடிக்கள் இருக்கின்றன. அதில் நான் அந்த தகவல்கள் பகிரப்பட்டுள்ளன. அந்த ஐடிக்கள் எல்லாமே தவறானவை. என்னுடையே ஒரிஜினல் ஐடி iyogibabu. இந்த தகவல்கள் நிறைய இடங்களுக்கு பரவியுள்ளன.

கட்சிக்காரன் அல்ல:
நான் திமுகவையோ, அதிமுகவையோ சேர்ந்தவன் இல்லை. நான் எந்த கட்சியையும் சார்ந்தது இல்லை. எனக்கு தெரிந்தது எல்லாம் நடிப்பு ஒன்று தான்.

விளக்கம்:
எனவே அந்த தவறான ஐடியில் வெளியான தகவல்களை யாரும் நம்பவேண்டாம். டிவிட்டரில் என் தொடர விரும்புபவர்கள், எனது ஒரிஜினல் ஐடியான iyogibabu-ல் பின்தொடருங்கள்", என அவர் தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











