கர்ணன் படத்தில் கேரக்டர் ரோல்.. ரசிகர்களின் பாராட்டு மழையில் யோகிபாபு
சென்னை: தனுஷ், ரஜிஷா விஜயன் ஆகியோர் நடிப்பில் கடந்த வாரம் திரையரங்குகளில் வெளிவந்துள்ள படம் கர்ணன்.
இந்த படத்தை மாரி செல்வராஜ் இயக்கியுள்ளார், சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். தாணு தயாரித்துள்ளார்.
இந்த படத்தில் யோகி பாபு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியுள்ளார். ரசிகர்களும் தொடர்ந்து பாராட்டி வருகின்றனர்.

தரமான படைப்பு
சமீப காலமாக தமிழ் சினிமா ரசிகர்கள் சிறப்பான படைப்புகளை கொண்டாட தவறுவதில்லை. கர்ணன் படத்தையும் அவ்வாறாகவே ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். தனுஷ் போன்ற முன்னனி நடிகரின் நடிப்பில் இப்படி ஒரு படம் வருவது ரசிகர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் விஷயமும் கூட.

நேர்த்தியான நடிப்பு
நகைச்சுவை நடிகரான யோகிபாபு இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மாரி செல்வராஜ் இயக்கிய பரியேறும் பெருமாள் படத்திலும் யோகிபாபு நடித்திருப்பார். அந்த படத்திலும் யோகிபாபுவின் நடிப்பும், நகைச்சுவையும் ரசிகர்களால் ரசிக்கப்பட்டு பாராட்டுகளை பெற்றது.

யோகிபாபு பேச்சு
இதை தொடர்ந்து மீண்டும் மாரிசெல்வராஜின் இயக்கத்தில் கர்ணன் படத்தில் நடித்துள்ளார். யோகி பாபு, பரியேறும் பெருமாள் படத்தை போல இந்த படத்திலும் தனக்கு வலுவான கதாப்பாத்திரம் அமைந்துள்ளது என முன்னதாக கூறியிருந்தார். அதே போல் வலுவாக கதாபாத்திரம் அமைந்துள்ளது.

பாராட்டு மழை
யாரும் எதிர்பாராத வகையில் கர்ணன் படத்தில் யோகிபாபுவின் கதாபாத்திரம் நகைச்சுவைக்கு பயன்படுத்தாமல் ஊரில் பெரியவராக கேரக்டர் ரோலில் பயன்படுத்தப்பட்டுள்ளது. தன்னுடைய நேர்த்தியான நடிப்பை வெளிப்படுத்திய யோகிபாபுவிற்கு ரசிகர்கள் பாராட்டு மழை பொழிந்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











