" எனக்கு கல்யாண வயசுதான் வந்துடிச்சுடி"... யோகிபாபுவுக்கு சீக்கிரமே டும்டும்டும்!
இந்தாண்டு இறுதிக்குள் தனக்கு திருமணம் ஆகும் என யோகிபாபு தெரிவித்துள்ளார்.
Recommended Video

சென்னை: கோலமாவு கோகிலா படத்தில் நயனை ஒருதலையாக காதலிக்கும் கதாபாத்திரத்தில் நடித்துள்ள காமெடி நடிகர் யோகிபாபுவுக்கு வீட்டில் பெண் பார்த்து வருகிறார்களாம்.
யோகி படம் மூலம் அறிமுகமானவர்கள் யோகிபாபுவும், கயல் தேவராஜும். நடிகரும், பத்திரிகையாளருமான கயல் தேவராஜ், யோகிபாபுவை ஜாலியாக பேட்டி எடுத்து அதனை தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
அந்த வீடியோவில் ஜாலியாக இரண்டு கேள்விகளை யோகிபாபுவிடம் கேட்கிறார் தேவராஜ்.

விரைவில் குட் நியூஸ்:
முதல் கேள்வியாக, ‘உங்களுக்கு எப்போது திருமணம், யாரையாவது காதலிக்கிறீர்களா? என தேவராஜ் கேட்கிறார். அதற்கு அவர், ‘நான் யாரையும் காதலிக்கவில்லை. வீட்டில் பெண் பார்த்து வருகின்றனர். எப்படியும் இந்த வருடத்திற்குள் திருமணம் முடிந்து விடும்" என பதிலளிக்கிறார்.

கடைசி வரை நடிப்பேன்:
அதனைத் தொடர்ந்து, "திருமணத்திற்குப் பிறகு நடிப்பீர்களா?" எனக் கேட்கிறார் தேவராஜ். அதற்கு சிரித்துக் கொண்டே, "நான் என்ன ஹீரோயினா? திருமணத்திற்குப் பிறகு நடிப்பதை நிறுத்திக் கொள்ள.. நான் காமெடியன் தானே" எனப் பதிலளிக்கிறார். பின்னர், ‘நிச்சயமாக திருமணத்திற்குப் பிறகு மட்டுமல்ல, கடைசி வரை நடித்துக் கொண்டேயிருப்பேன்" என்கிறார்.

கல்யாண வயசு பாடல்:
அடுத்தமாதம் ரிலீசாகவுள்ள கோலமாவு கோகிலா படத்தில் நயன்தாராவை ஒரு தலையாக காதலிக்கும் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் யோகிபாபு. இந்தப் படத்தில் இடம்பெற்றுள்ள யோகிபாபுவின் ‘எனக்கு கல்யாண வயசு தான் வந்துருச்சுடி' பாடல் பட்டி தொட்டியெங்கும் ஹிட்டடித்துள்ளது.

ஒரே நாளில் 2 படங்கள்:
இது தவிர தமிழில் கை நிறைய படங்களில் நடித்து வருகிறார் யோகிபாபு. கடந்த வாரம் விஜய் சேதுபதியுடன் அவர் நடித்த ஜுங்கா மற்றும் திரிஷாவுடன் நடித்த மோகினி என இரண்டு படங்கள் ஒரே நாளில் வெளியானது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











