Yogi Babu - காரை நிறுத்துங்க ஒன்னு கொடுக்கணும்.. யோகிபாபு செய்த செயல்.. நெகிழ்ந்து போன விஷால்
சென்னை: Yogibabu (யோகிபாபு) தனக்கு யோகிபாபு கொடுத்த பரிசு தொடர்பாக விஷால் நெகிழ்ச்சியுடன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார்.
விஷால் கடந்த பல வருடங்களாகவே ஒரு ஹிட்டுக்கு காத்துக்கொண்டிருந்தார். எப்படியாவது ஹிட் கொடுத்துவிட வேண்டும் என்ற முனைப்பில் இருந்த அவர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் மார்க் ஆண்டனி படத்தில் நடித்தார். டைம் ட்ராவல் ஜானரில் படம் உருவாகியிருந்தது. விஷால், எஸ்.ஜே.சூர்யா, செல்வராகவன், ரிது வர்மா உள்ளிட்டோர் நடித்திருக்கின்றனர்.

நல்ல வரவேற்பு: தமிழ் சினிமாவில் டைம் ட்ராவல் ஜானரில் வரும் படங்களுக்கு எப்போதுமே வரவேற்பு இருக்கும். இன்று நேற்று நாளை போன்ற படங்கள் அதற்கு உதாரணம். அப்படிப்பட்ட ஜானரில் படம் வெளியானதால் எதிர்பார்ப்போடு படத்துக்கு சென்றனர் ரசிகர்கள். படத்தை பார்த்த ரசிகர்கள் தாங்கள் எதிர்பார்த்ததைவிட அதிகமாகவே படம் திருப்திப்படுத்திவிட்டதாக கூறினர்.
கலக்கிய ஆதிக்: ஆதிக் ரவிச்சந்திரன் இதற்கு முன்னதாக த்ரிஷா இல்லனா நயன்தாரா, அன்பானவன் அடங்காதவன் அசராதவன் ஆகிய படங்களை இயக்கியிருந்தார். அந்த இரண்டு படங்களுமே படுதோல்வியை சந்தித்தன. ஆனால் இரண்டு படங்களில் விட்டதை மார்க் ஆண்டனி படத்தில் பிடித்துவிட்டார். காட்சிக்கு காட்சி போர் அடிக்காமல் படத்தை அவர் நகர்த்தி சென்ற விதம் பெரும் பாராட்டை ரசிகர்களிடம் பெற்றிருக்கிறது.
எஸ்.ஜே.சூர்யா: படத்தின் ஹைலைட்டாக இருந்தது நடிப்பு அரக்கன் எஸ்.ஜே.சூர்யாதான். வயதான எஸ்.ஜே.சூர்யாவாகவும், இள வயது எஸ்.ஜே.சூர்யாவாகவும் தனது நடிப்பில் வேரியேஷன் காண்பித்து அசத்தியிருக்கிறார் படத்தில். முக்கியமாக இரண்டு எஸ்.ஜே.சூர்யாக்களும் ஃபோனில் பேசிக்கொள்ளும் காட்சியிலும், சில்க் ஸ்மிதா காட்சியிலும் சூர்யாவின் நடிப்பு பட்டாசு ரகம். அவர் வரும் ஒவ்வொரு காட்சியையும் ரசிகர்கள் கைத்தட்டி என்ஜாய் செய்தனர். படம் கிட்டத்தட்ட நூறு கோடி ரூபாயை வசூலித்திருப்பதாக கூறப்படுகிறது.

அடுத்த படம்: மார்க் ஆண்டனி வெற்றிக்கு பிறகு விஷால் ஹரி இயக்கத்தில் நடிக்கிறார். அவருடன் யோகிபாபு உள்ளிட்டோர் நடிக்கின்றனர். படத்தின் ஷூட்டிங் தொடங்கி விறுவிறுப்பாக நடந்துவருகிறது. இந்நிலையில் ஷூட்டிங்கிற்கு சென்றுகொண்டிருந்தபோது திடீரென காரை நிறுத்த சொன்ன யோகிபாபு ஒரு கடைக்கு சென்று முருகன் சிலையை வாங்கி விஷாலுக்கு பரிசாக கொடுத்தார். அந்தப் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருக்கும் விஷால், லவ் யூ டார்லிங் என குறிப்பிட்டிருக்கிறார்.


Click it and Unblock the Notifications











