தளபதி 66 ஷுட்டிங்கில் இணைந்த பிரபலம்...அப்போ படம் செமயா இருக்குமே
சென்னை : விஜய் நடித்து வரும் தளபதி 66 படத்தின் ஷுட்டிங்கில் முக்கிய பிரபலம் ஒருவரும் கலந்து கொண்டுள்ளாராம். இவர் தளபதி 66 படத்தில் முக்கிய ரோல் ஒன்றில் நடிப்பதாக கூறப்படுகிறது.
டைரக்டர் வம்சி பைடபள்ளி இயக்கும் தளபதி 66 படத்தின் வேலைகள் சத்தமில்லாமல், அதே சமயத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஏப்ரல் 6 ம் தேதி சென்னையில் பூஜையுடன் துவங்கிய முதல் கட்ட ஷுட்டிங் சில நாட்களிலேயே முடிக்கப்பட்டது. தில்ராஜு தயாரிக்கும் இந்த படத்திற்கு தமன் இசையமைத்து வருகிறார்.

சரத்குமார் சொன்ன தகவல்
2022 ம் ஆண்டு தீபாவளிக்கு தளபதி 66 ரிலீசாகும், மே 1 ம் தேதி தளபதி 66 ஃபர்ஸ்ட்லுக் மற்றும் டைட்டில் ரிலீசாகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் விஜய்யின் பிறந்தநாளான ஜுன் 22 ம் தேதி படத்தில் ஃபர்ஸ்ட்லுக்கையும், 2023 ம் ஆண்டு பொங்கலுக்கு படத்தையும் ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. தளபதி 66 படத்தின் ஷுட்டிங் ஆகஸ்ட் மாதம் வரை நடைபெற உள்ளதாக சமீபத்தில் பேட்டி ஒன்றில் சரத்குமார் கூறி இருந்தார்.

யாரெல்லாம் நடிக்கிறார்கள்
சரத்குமார், ராஷ்மிகா மந்தனா, ஷாம் ஆகியோர் மட்டும் தளபதி 66 படத்தில் நடிப்பதாக இதுவரை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருந்தது. ராஷ்மிகா ஜோடியாகவும், சரத்குமார் விஜய்யின் அப்பாவாகவும், ஷாம் விஜய்யின் அண்ணன்களில் ஒருவராகவும் நடிப்பதாக கூறப்பட்டது. மற்றவர்கள் பற்றிய தகவல் வெளியிடப்படாமல் இருந்தது.

எங்கு ஷுட்டிங் நடக்கிறது
இதே போல் சென்னையில் நடந்த முதல் கட்ட ஷுட்டிங்கில் என்ன காட்சிகள் எடுத்தார்கள் என்பதும் தெரியவில்லை. இந்நிலையில் இரண்டாம் கட்ட ஷுட்டிங் ஐதராபாத்தில் அன்னபூர்ணா ஸ்டூடியோவில் நேற்று துவங்கி நடந்து வருகிறது. இதில் ராஷ்மிகா, சரத்குமார் ஆகியோரும் கலந்து கொள்ள உள்ளதாக கூறப்பட்டது. ஐதராபாத்தில் அமைக்கப்பட்டுள்ள பிரம்மாண்ட செட்டில் இம்மாத இறுதி வரை ஷுட்டிங் நடத்தப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

இவரும் இருக்காரா படத்தில்
இந்நிலையில் தற்போது நடைபெற்று வரும் ஐதராபாத் ஷுட்டிங்கில் யோகிபாபுவும் கலந்து கொண்டுள்ளாராம். தளபதி 66 படத்தில் யோகிபாபு முக்கிய கேரக்டரில் நடிப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. விஜய்யின் சர்கார், பிகில், பீஸ்ட் படங்களைத் தொடர்ந்து தளபதி 66 படத்திலும் யோகிபாபு நடிக்க உள்ளார். இதனால் படத்தில் விஜய் - யோகிபாபு காம்போவின் காமெடி வேற லெவலில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Recommended Video

இப்படி ஒரு பிளான் இருக்கா
தளபதி 66 படத்தின் இரண்டாம் கட்ட ஷுட்டிங் ஐதராபாத்தில் முடிவடைந்ததும், மூன்றாம் கட்ட ஷுட்டிங் சென்னையில் நடத்தப்பட உள்ளதாகவும், அங்கு அமைக்கப்பட உள்ள பிரம்மாண்டமான செட்டில் பாடல் காட்சிகள் படமாக்கப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications