யோகிபாபுவும் மொட்டை ராஜேந்திரனும் கலக்கும் காவி ஆவி நடுவுல தேவி

Recommended Video

யோகிபாபுவும் மொட்டை ராஜேந்திரனும் கலக்கும் காவி ஆவி நடுவுல தேவி | Kaavi Aavi Naduvula Devi

சென்னை: நவராத்திரியில் சிவாஜி ஒன்பது வேடத்தில் நடித்தார், தசாவதாரத்தில் கமல் 10 வேடங்களில் நடித்தார். காவி ஆவி நடுவில தேவி படத்தில யோகிபாவு 11 வேடங்களில் நடிக்கிறார். முழுக்க முழுக்க யோகிபாபுவின் காமெடியை நம்பியே உருவாகி வருகிறது இந்த படம். காவி ஆவி நடுவுல தேவி திரைப்படத்தில், காதலர்களை சேர்த்து வைக்க பாடுபடும் குழலூதும் கண்ணனாக யோகிபாபு நடித்துள்ளாராம்.

தமிழ் சினிமாவில் தற்போது உச்சபட்ச நட்சத்திரமாக கருதப்படும் யோகி பாபு ஒரு வருடத்தில் குறைந்த பட்சம் 10க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து வருகிறார். கமர்சியல் கதையாக இருந்தாலும் சரி, சிறந்த சப்போர்ட்டிங் ரோலாக இருந்தாலும் சரி சிறப்பாக நடித்து வருகிறார்.

பரியேறும் பெருமாள் படத்திலும் கோமாளி படத்திலும் மிகச்சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார். தற்போது அவர் காவி ஆவி நடுவுல தேவி என்ற முழுக்க முழுக்க நகைச்சுவையாக உருவாகும் படத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தில் யோகிபாபுவுக்கு 11 வேடங்கள் என படக்குழு தெரிவித்து உள்ளது.

காசி யாத்திரை

காசி யாத்திரை

கடந்த 1973ஆம் ஆண்டு கறுப்பு வெள்ளையில் உருவாகி காமெடியில் கலக்கி வெற்றி பெற்ற திரைப்படம் காசியாத்திரை. அந்த படத்தில் நடித்த அனைவருமே நம்பர் ஒன் காமெடி நடிகர்கள். வி.கே.ராமசாமி, சோ, தேங்காய் சீனிவாசன், சுருளிராஜன், மனோரமா, டைப்பிஸ்ட் கோபு என நகைச்சுவை பட்டாளமே சேர்ந்து காமெடியில் திணறடித்த படம்.

காவி ஆவி நடுவில தேவி

காவி ஆவி நடுவில தேவி

தற்போது அந்த படத்தின் இரண்டாம் பாகமாக காவி ஆவி நடுவுல தேவி படத்தை தயாரிக்கின்றனர். இப்படத்திற்கு கதை எழுதியிருப்பவர் வி.சி.குகநாதன். இவர்தான் காசியாத்திரை படத்திற்கும் கதாசிரியர். இதனால் இந்தப் படமும் ஆரம்பம் முதல் இறுதி வரையில் காமெடியாகவே இருக்கும் என்பது கேரண்டி.

காதலர்களுக்கு ஹெல்ப்

காதலர்களுக்கு ஹெல்ப்

இப்படத்தில் யோகி பாபு காதலர்களை சேர்த்து வைக்கும் கண்ணனாகவும், காதலர்களை பிரித்து வைக்கும் தாதாவாக மொட்டை ராஜேந்திரனும் நடித்துள்ளனர். இந்த படத்தை புகழ்மணி இயக்க உள்ளார். இப்படத்தில் பல புதுமுகங்களுடன் சேர்த்து தம்பி ராமையா ,மொட்டை ராஜேந்திரன், இமான் அண்ணாச்சி போன்றோரும் நடிக்க உள்ளனர்.

யோகிபாபு

யோகிபாபு

தற்போது குணச்சித்திர ரோல், காமடி ரோல் என்று நடித்து விட்டு சின்ன பட்ஜெட் படங்களில் ஹீரோவாக நடிக்க ஆரம்பித்து இருக்கும் யோகி பாபுவுக்கு இது மிக முக்கியமான படமாக கருதப்படுகிறது. ஏனெனில் இவர் ஹீரோவாக நடித்த தர்மபிரபு, கூர்கா என இரண்டு படங்களும் அவர் எதிர்பார்த்த வெற்றி பெற வில்லை.

பிஸியான நடிகர்

பிஸியான நடிகர்

இதனால் காவி ஆவி நடுவுல தேவி படம் யோகி பாபுக்கு மிக முக்கியமாக கருதப்படுகிறது. இருந்தாலும் பிஸியான இந்த நேரத்தில் விஜயின் பிகில் உள்ளிட்ட சில படங்களிலும் நடித்து முடித்து விட்டார். தற்போது அக்டோபர் 4ஆம் தேதி வெளியாக இருக்கும் அசுரன் படத்தில் சிறிய வேடத்தில் நடித்து இருக்கிறார். இதை தொடர்ந்து அக்டோபர் 11ஆம் தேதியன்று தமன்னா நடிப்பில் ரீலிஸ் ஆக இருக்கும் பெட்ரோமாக்ஸ் படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருக்கிறார் யோகி பாபு.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X