என்ன கொடுமை சார் இது... நயன்தாராவுக்கு புரொபோஸ் செய்யும் யோகி பாபு...
நடிகை நயன்தாராவுக்கு காமெடி நடிகர் யோகிபாபு புரொபோஸ் செய்யும் வீடியோ காட்சி இணையத்தில் வைரலாகியுள்ளது.
சென்னை: நயன்தாரா நடித்துள்ள கோலமாவு கோகிலா படத்தில் சிவகார்த்திகேயன் எழுதிய 'கல்யாண வயசுல' பாடலின் வித்தியாசமான டிரெய்லர் வைரலாக பரவி வருகிறது.
லைகா புரோடக்சன் தயாரிப்பில் அறிமுக இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில், வித்தியாசமான தோற்றத்தில் நயன்தாரா நடித்துள்ள படம் கோலமாவு கோகிலா. டார்க் திரில்லர் ஜானர் வகை படமான அதில் சென்னையின் கிரைம் முகத்தை காட்சிப்படுத்தியுள்ளதாக படக்குழு கூறியுள்ளது.
சமீபகாலமாக நாயகிகளுக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடித்துவருவதால் நயன்தாராவின் இந்த படத்திற்கும் இப்போதே எதிர்ப்பார்ப்பு அதிகமாக காணப்படுகிறது.

சிவகார்த்திகேயன் பாடல்...
அனிருத் இசையத்துள்ள இப்படத்தில் ஒரு பாடலை நடிகர் சிவகார்த்திகேயன் எழுதியுள்ளார். இப்பாடலின் டிரெய்லர் இணையத்தில் வெளியாகி வைரலாகி உள்ளது.

லல் புரொபோஸ்..
இந்த வீடியோவில் உள்ள காட்சிகளில் காமெடி நடிகர் யோகிபாபு, லேடி சூப்பர் ஸ்டார் எனப் புகழப்படும் நயன்தாராவுக்கு லவ் புரொபோஸ் செய்வது போல் இடம்பெற்றுள்ளது.

தமிழ் மட்டுமின்றி...
தமிழ் மட்டுமின்றி மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட மொழி படங்களிலும் முன்னணி நடிகைகளில் ஒருவராக நயன்தாரா உள்ளார். தமிழ் சினிமாவில் கமலை தவிர, ரஜினி, விஜய், அஜித், சூர்யா, தனுஷ் உள்ளிட்ட முன்னணி நாயகர்களுடன் நடித்துள்ளவர் நயன்தாரா. இவர் விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன் உள்ளிட்ட இளம் நாயகர்களுடன் ஜோடி சேர்ந்தபோது, தமிழ் ரசிகர்கள் ஆச்சர்யப்பட்டனர்.

ஆச்சர்யம்...
இந்நிலையில் கோலமாவு கோகிலா படத்தில் காமெடி நடிகர் யோகிபாபு காதலிக்கும் பெண் கதாபாத்திரத்தில் நயன்தாரா நடித்துள்ளது அவரது ரசிகர்களை அதிர்ச்சி கலந்த ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. இதன் மூலம் கதைக்கு தேவைப்பட்டால் தமது இமேஜை பற்றி யோசிக்காமல், நயன்தாரா நடிப்பார் என்பது உறுதியாகியுள்ளது என அவரது ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











