பக்தி முத்திடுச்சு போல.. தஞ்சை பெரிய கோயிலில் யோகிபாபு தரிசனம்
சென்னை: கோலிவுட்டின் தவிர்க்க முடியாத காமெடி நடிகராக உருவெடுத்து இருக்கிறார் யோகிபாபு. லொள்ளு சபா நிகழ்ச்சியின் மூலம் சின்னத்திரையில் அறிமுகம் ஆகி பின்னர் வெள்ளி திரைக்கு வந்தவர். வெள்ளித்திரைக்கு வந்த புதிதில் அவருக்கு பெரிதாக எந்த வாய்ப்பும் இல்லை. ஒரு வழியாக யாமிருக்க பயமேன் படத்தில் அவர் ஏற்றிருந்த கதாபாத்திரம் பலராலும் ரசிக்கப்பட்டது. இதனையடுத்து தொடர்ந்து பல படங்களில் நடித்து தனக்கான இடத்தை உருவாக்கிக்கொண்டார்.
தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகராக வலம் வந்துகொண்டிருக்கிறார் யோகிபாபு. அவரது கவுண்ட்டர்களும், டைமிங் சென்ஸும் ரசிகர்களை வெகுவாக சிரிக்க வைப்பவை.லொள்ளு சபாவின் மூலம் சின்னத்திரையில் அறிமுகமாகி பிறகு பெரிய திரைக்கு வந்தவர். ஆரம்பத்தில் சிறு சிறு வேடங்களில் நடித்துக்கொண்டிருந்த யோகிபாபு இப்போது இல்லாத படங்களே இல்லை என்று சொல்லலாம். முன்னணி ஹீரோக்கள் அனைவருடனும் நகைச்சுவை செய்துவிட்டார்.

ஹீரோ: காமெடியன்கள் ஹீரோவாகும் கலாச்சாரம் தமிழ்நாட்டில் பெருகிவருகிறது. அதற்கு ஏற்றார் போல் நடிகர் யோகிபாபுவும் நெல்சன் திலீப்குமார் இயக்கிய கோலமாவு கோகிலா திரைப்படத்தில் லீடு ரோலில் நடித்தார். அதனைத் தொடர்ந்து மடோன் அஸ்வின் இயக்கிய மண்டேலா படத்திலும் ஹீரோவாக நடித்தார். இரண்டு படங்களுமே விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றன என்பது குறிப்பிடத்தக்கது.
மாவீரன், ஜெயிலர்: அதனை தொடர்ந்து அவர் நடித்த கூர்கா உள்ளிட்ட படங்கள் போதிய வரவேற்பைப் பெறவில்லை. ஹீரோவாக நடித்தாலும் காமெடி ரோலிலும் தொடர்ந்து நடித்துவருகிறார். அந்த வகையில் அவர் மாவீரன் மற்றும் ஜெயிலர் ஆகிய படங்களில் நடித்திருந்தார். மாவீரன் படத்தில் யோகிபாபுவின் டைமிங்கும் கவுண்ட்டர்களும் ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைத்தன. அதேபோல் ஜெயிலர் படத்திலும் நல்ல விதமாகவே காமெடி செய்திருந்தார்.
பிற மொழிகளிலும்: தமிழ் மட்டுமின்றி மலையாளம், ஹிந்தி உள்ளிட்ட மொழிகளிலும் பிஸியாக நடித்துவருகிறார் யோகிபாபு. அந்தவகையில் மலையாளத்தில் அவர் கடைசியாக குருவாயூர் அம்பல நடையில் படத்தில் நடித்திருந்தார். அதேபோல் ஹிந்தியிலும் தொடர்ந்து சில படங்களில் கமிட்டாகியிருப்பதாக கூறப்படும் யோகிபாபு; தமிழில் டஜன் கணக்கில் படங்களை வைத்திருக்கிறார். கடைசியாக அவர் முன்னணி கதாபாத்திரம் ஏற்று சட்னி சாம்பார் படத்தில் நடித்தார்.
பக்திமான் யோகிபாபு: இதற்கிடையே யோகிபாபு மிகப்பெரிய பக்தியாளர் ஆவார். குறிப்பாக அவர் தீவிர முருக பக்தர் என்பது குறிப்பிடத்தக்கது. அடிக்கடி அவர் முருக கோயில்களுக்கு செல்வது வழக்கம். அப்படி அவர் கோயிலுக்கு அவர் செல்லும்போது அங்கிருக்கும் யாசகர்களுக்கும், ஏழை எளிய மக்களுக்கும் சில உதவிகளை செய்வதும் குறிப்பிடத்தக்கது. அதுதொடர்பான வீடியோக்களும் புகைப்படமும் சமூக வலைதளங்களில் ட்ரெண்டாவது குறிப்பிடத்தக்கது.
தஞ்சை பெரிய கோயிலில் தரிசனம்: இந்நிலையில் அவர் தஞ்சை பெரிய கோயிலில் சாமி தரிசனம் செய்திருக்கிறார். நேற்று இரவு அவர் கோயிலுக்கு வந்தபோது அவருடன் களவாணி படத்தின் இரண்டாம் பாகத்தில் நடித்த துரை சுதாகரும் உடன் வந்தார். அவர்கள் இருவரும் சாமியை தரிசித்துவிட்டு கோயிலை சுற்றி வந்தனர். அப்போது அங்கிருந்த பக்தர்கள் யோகிபாபுவை பார்த்ததும் அவருடன் செல்ஃபி எடுத்து மகிழ்ந்தார்கள்.


Click it and Unblock the Notifications











