யோகக்கார யோகிபாபு… வடிவேலுவின் பேய்மாமாவிலும் இவர் தான் ஹீரோ!

வடிவேலு நடிப்பில் உருவாகவிருந்த பேய்மாமா படத்திலும், வடிவேலு வெளியேற்றப்பட்டு யோகிபாபு நடித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

Recommended Video

யோகிபாபுவும் மொட்டை ராஜேந்திரனும் கலக்கும் காவி ஆவி நடுவுல தேவி | Kaavi Aavi Naduvula Devi

சென்னை: என்னதான் பிரே ஃபார் நேசமணி ஹேஷ்டேக் உலகளவில் டிரெண்ட் ஆனாலும், அந்த டிரெண்டிங் தயாரிப்பாளர் சங்கத்தில் வடிவேலுவுக்கு விதிக்கப்பட்ட பிளாக் மார்க்கை தீர்க்க உதவவில்லை.

சக்தி சிதம்பரம் இயக்கத்தில் வடிவேலு நடிக்கப்போவதாக அறிவிக்கப்பட்ட பேய்மாமா படத்திலும், தற்போது வடிவேலுவுக்கு பதிலாக யோகிபாபு நடித்து வரும் தகவல் வெளியாகியுள்ளது.

இம்சை அரசன் இம்சை

இம்சை அரசன் இம்சை

இயக்குநர் ஷங்கர் தயாரிப்பில், சிம்புதேவன் இயக்கத்தில் வெளியான இம்சை அரசன் மாபெரும் வெற்றியை பெற்றது. அதனை தொடர்ந்து இம்சை அரசன் இரண்டாம் பாகத்தில் நடிக்க வைக்க வடிவேலு ஒப்பந்தம் செய்யப்பட்டார்.

ஆனால், படக்குழுவினரிடம் தினமும் வடிவேலு இம்சை கொடுத்து வந்தததாகவும், அந்த படத்தில் இனி நடிக்க மாட்டேன் என்று முடிவெடுத்ததாகவும் தகவல்கள் வெளியாகின.

இதனால், கடுப்பான தயாரிப்பாளர் தரப்பு தயாரிப்பாளர் சங்கத்தில் வடிவேலுவுக்கு எதிராக புகார் கொடுத்தார். அதன் பிறகு வடிவேலுவுக்கு எந்த படத்திலும் நடிக்க வாய்ப்புகள் வழங்கப்படவில்லை.

ஒன்றுக்கும் உதவாத டிரெண்டிங்

ஒன்றுக்கும் உதவாத டிரெண்டிங்

வடிவேலு படங்களில் இடம்பெற்ற காட்சிகளையும் வசனங்களையும் மீம் மெட்டீரியலாகவும், டிரோல்களாகவும் போட்டு பல யூடியூபர்கள் சம்பாதித்து வருகின்றனர். சமீபத்தில் உலகளவில் சேவ் ஃபார் நேசமணி ஹேஷ்டேகும் டிரெண்டானது.

வடிவேலுவின் புகழ் உலகளவில் சென்று விட்டதால், அவருக்கு மீண்டும் பட வாய்ப்புகள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இதுவரை அவர் மீது தயாரிப்பாளர் சங்கத்தில் வைக்கப்பட்ட கரும்புள்ளி கூட அந்த டிரெண்டிங்கால் மாறவில்லை என்பது தான் நிதர்சனம்.

யோகிபாபுவுக்கு யோகம்

யோகிபாபுவுக்கு யோகம்

வடிவேலுவின் வெற்றிடத்தை தனக்கு சாதகமாக யோகிபாபு பயன்படுத்திக் கொண்டார். கடந்த ஆண்டு மட்டும் இவர் நடிப்பில் 19 படங்கள் வெளியானது. இந்த ஆண்டும் இருபது படங்களுக்கும் மேல் கைவசம் வைத்துள்ளார்.

வடிவேலு நடிப்பில் உருவாகும் என அறிவிக்கப்பட்ட பேய்மாமா படத்தில் யோகிபாபு நடித்து வருகிறாராம். இதன் படப்பிடிப்பு பணிகள் குமுளி பகுதியில் நடைபெற்று வருகிறது என்ற தகவல் வெளியாகி உள்ளது.

வடிவேலுவின் சோகம்

வடிவேலுவின் சோகம்

சக்தி சிதம்பரத்தின் பேய் மாமா படம் மட்டுமின்றி இம்சை அரசன் 2ம் பாகத்திலும் வடிவேலுவுக்கு பதிலாக தற்போது காமெடி மார்க்கெட்டை தன்வசம் வைத்துள்ள யோகிபாபுவை வைத்து இயக்க சிம்புதேவன் முடிவு செய்துள்ள செய்தியும் கசிந்து வரும் நிலையில், வடிவேலு மேலும் சோகத்தில் உள்ளாராம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X