Kuiko - யோகிபாபுவின் புதிய படம்.. குய்கோ படத்தின் போஸ்டர் ரிலீஸ்.. கதை என்ன தெரியுமா?

சென்னை: Kuiko (குய்கோ) யோகிபாபு நடிக்கும் குய்கோ படத்தின் போஸ்டரை விஜய் சேதுபதி ரிலீஸ் செய்திருக்கிறார்.

Yogibabus New Movie Kuiko Poster was out now

சின்னத்திரையிலிருந்து வெள்ளித்திரைக்கு வந்தவர் யோகிபாபு. ஆரம்பத்தில் சிறு சிறு வேடங்களில் நடித்துவந்த அவர் தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி காமெடி நடிகர்களில் ஒருவராக இருக்கிறார். அவர் கையில் ஏராளமான படங்கள் இருக்கின்றன. இதனால் படு பிஸியாக நடித்துவருகிறார் யோகிபாபு. டாப் ஹீரோக்கள் அத்தனை பேருடனும் இணைந்து நடித்து அனைவராலும் அறியப்பட்டவர். முதலில் யாமிருக்க பயமேன் படத்தின் மூலம்தான் அடையாளப்பட்டார்.

ஹீரோ யோகிபாபு: நகைச்சுவை நடிகராக வலம் வந்த யோகிபாபு நெல்சன் திலீப்குமார் முதன்முறையாக இயக்கிய கோலமாவு கோகிலா படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். முதல் படமே லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவுக்கு ஹீரோவாக நடித்த யோகிபாபுவுக்கு கோலமாவு கோகிலா படமானது வரவேற்பைப் பெற்றது. இதனால் ஹீரோவாகவே தொடரலாம் என்பதை அவர் செய்தார். அதேசமயம் நகைச்சுவை காட்சிகளில் நடிப்பதற்கே முக்கியத்துவம் கொடுப்பேன் எனவும் அவர் தெரிவித்திருந்தார்.

மண்டேலா : ஹீரோவாக முதல் பட வெற்றிக்கு பிறகு மடோன் அஸ்வின் இயக்கத்தில் மண்டேலா படத்தில் கதாநாயகனாக நடித்தார் யோகிபாபு. வித்தியாசமான கதைக்களத்தைக்கொண்ட மண்டேலாவும் சூப்பர் ஹிட்டானது. குறிப்பாக படம் தேசிய விருதையும் வென்றது. இதனால் யோகிபாபு உற்சாகத்தின் உச்சத்துக்கே சென்றார். மேலும் அவருக்குள் சிறந்த நடிகர் இருக்கிறார் என்பதையும் ரசிகர்களுக்கு மண்டேலா உணர்த்தியது.

இதனையடுத்து அவரது நடிப்பில் மாவீரன், ஜெயிலர் படங்கள் வெளியாகின. இரண்டு படங்களுமே ஹிட்டானாலும் மாவீரன் படத்தில் யோகிபாபுவின் காமெடி பலரையும் ரசிக்க வைத்தது. இந்நிலையில் யோகிபாபு ஹீரோவாக புதிய படத்தில் நடிக்கிறார். விஜய் சேதுபதி நடித்த ஆண்டவன் கட்டளை படத்துக்கு கதை எழுதிய பத்திரிகையாளர் டி.அருள் செழியன் எழுதி இயக்கும் குய்கோ படத்தில் நடிக்கவிருக்கிறார்.

இந்தப் படத்தில் விதார்த், இளவரசு உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். யோகிபாபு மலையப்பன் என்ற கதாபாத்திரத்தை ஏற்றிருக்கிறார். மலையடிவார கிராமத்திலிருந்து சவுதி சென்று ஒட்டகம் மேய்க்கும் யோகிபாபு தன்னுடைய தாயின் உயிரிழப்புக்கு ஊருக்கு வருவதும்; அதற்கிடையே தாயின் சடலத்தை ப்ரீசர் பாக்ஸில் வைக்க ஏற்பாடு நடப்பதும் அதில் விதார்த் வருவதும்; கடைசியில் யோகிபாபுவுக்கு அந்த ப்ரீசர் பாக்ஸ் எவ்வளவு முக்கியம் என்ன மாதிரியான திருப்புமுனையை ஏற்படுத்துகிறது என கதை உருவாக்கப்பட்டிருக்கிறது.

Yogibabus New Movie Kuiko Poster was out now

இந்நிலையில் குய்கோ படத்தின் போஸ்டர் வெளியாகியிருக்கிறது. அதனை நடிகர் விஜய் சேதுபதி வெளியிட்டிருக்கிறார். அந்த போஸரில் யோகிபாபு சவுதி ஷேக் கெட்டப்பில் ஒட்டகம் மேய்க்கும்படி இருக்கிறார். அந்தோணி தாசன் இசையமைக்க ராஜேஷ் யாதவ் ஒளிப்பதிவு செய்கிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X