உடலில் பூணூல்.. கையில் கிரிக்கெட் பால்... சர்ச்சையை கிளப்பும் 'யார்க்கர்' பட போஸ்டர்..!
நிஷாந்த் நாயகனாக நடிக்கும் யார்க்கர் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது.
சென்னை: உடலில் பூணூல் தெரிய கையில் கிரிக்கெட் பாலுடன் நாயகன் நிற்கும் யார்க்கர் பட போஸ்டர் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
ஆண்டனி, பன்றிக்கு நன்றி சொல்லி உள்ளிட்ட படங்களில் நடித்தவர் நிஷாந்த். இவர் தற்போது நடித்து வரும் படம் யார்க்கர். இந்த படம் கிரிக்கெட் விளையாட்டில் நடக்கும் அரசியலை பற்றி பேசுகிறது.

இப்படத்தில் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியிடப்பட்டது. அதில் நாயகன் நிஷாந்த், உடலில் பூணூல் தெரியும்படி சட்டை அணியாமல் நிற்கிறார். அவரது கையில் கிரிக்கெட் பால் இருக்கிறது. இது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
ஏற்கனவே கிரிக்கெட் விளையாட்டில் சாதிய பாகுபாடுகள் இருப்பதாக குற்றச்சாட்டுகள் உள்ளன. இதை மையப்படுத்தி விஷ்ணு விஷா நடிப்பில் சுசீந்திரன் இயக்கிய ஜீவா படம் வெளிவந்தது. இந்நிலையில் யார்க்கர் படமும் அதே பின்னணியில் உருவாக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.
யார்க்கர் திரைப்படத்தை நவீத் எஸ் பரீத் என்பவர் இயக்கி வருகிறார். இப்படத்திற்கு 'துப்பறிவாளன்' புகழ் அரோல் கரோலி இசையமைத்துள்ளார். அண்மைக்காலமாக தமிழ் சினிமாவில் விளையாட்டு சார்ந்த படங்கள் அதிகரித்து வருகிறது.


Click it and Unblock the Notifications











