எங்க எல்லாரையும் முன்னாடி இருந்து வழிநடத்துங்க... நெல்சனுக்கு விக்னேஷ் சிவன் பிறந்தநாள் வாழ்த்து
சென்னை : கோலமாவு கோகிலா, டாக்டர் மற்றும் தளபதி 65 படங்களின் இயக்குநர் நெல்சன் திலீப்குமார்.
அவர் தன்னுடைய 37வது பிறந்தநாளை இன்றைய தினம் கொண்டாடி வருகிறார்.
இந்நிலையில் அவரது பிறந்தநாளையொட்டி இயக்குநர் விக்னேஷ் சிவன் தனது வாழ்த்துக்களை பகிர்ந்துள்ளார்.

இயக்குநர் நெல்சன் திலீப்குமார்
கோலமாவு கோகிலா படத்தின்மூலம் கோலிவுட்டில் தன்னை சிறப்பான இயகுநராக நிலைநிறுத்திக் கொண்டவர் நெல்சன் திலீப்குமார். தொடர்ந்து சிவகார்த்திகேயன் லீட் ரோலில் நடித்துள்ள டாக்டர் மற்றும் தற்போது தளபதி 65 படத்தையும் இயக்கி வருகிறார்.

குவியும் வாழ்த்துக்கள்
டாக்டர் மற்றும் தளபதி 65 இரண்டு படங்களும் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளன. இந்நிலையில் தனது 37வது பிறந்தநாளை இன்றைய தினம் நெல்சன் கொண்டாடி வருகிறார். இதையொட்டி அவருக்கு சமூக வலைதளங்களில் வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன.

வழிநடத்த கோரிக்கை
இதனிடையே இயக்குநர் விக்னேஷ் சிவன் நெல்சனுக்கு தனது பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். மேலும் தங்கள் அனைவரையும் முன்னால் இருந்து சரியான பாதையில் எப்போதும் வழிநடத்த வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.

மகிழ்ச்சியுடன் இருக்க வேண்டும்
தொடர்ந்து எப்போதும் இளமையாகவும் ஹாண்ட்சம்மாகவும் நகைச்சுவை மற்றும் மகிழ்ச்சியுடனும் நெல்சன் திகழ வேண்டும் என்றும் வாழ்த்தியுள்ளார். மேலும் டாக்டர் மற்றும் தளபதி 65 படங்கள் சிறப்பாக அமையவும் வாழ்த்துக்களை பகிர்ந்துள்ளார். மேலும் கடவுள் எப்போதும் உடனிருக்கவும் வாழ்த்தியுள்ளார்.


Click it and Unblock the Notifications











