நீங்க ஒரு ஹீரோ.. தனுஷ் பட நாயகியை அப்படி பாராட்டிய சோனு சூட்.. என்ன பண்ணாரு தெரியுமா?

மும்பை: கொரோனா இரண்டாவது அலை இந்தியாவை மோசமாக தாக்கி வரும் நிலையில், பாலிவுட் நடிகர்கள் பலரும் மக்களுக்கு உதவும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

கடந்த ஆண்டு கொரோனா பரவல் இந்தியாவில் கடும் பாதிப்பை ஏற்படுத்திய நிலையில், சமூக பணிகளை ஆரம்பித்த நடிகர் சோனு சூட், தொடர்ந்து கொரோனாவில் இருந்து மக்களை காக்கும் சேவையை செய்து வருகிறார்.

இந்நிலையில், நடிகை சாரா அலி கான் சோனு சூட்டின் தொண்டு நிறுவனத்துக்கு நிதியளித்து பாராட்டுக்களை அள்ளி உள்ளார்.

சேவை நாயகன்

சேவை நாயகன்

கொரோனா காலத்தில் மக்கள் அவதிப்பட்டு வரும் நிலையில், ஆக்ஸிஜன் மற்றும் படுக்கை வசதிகளை சில நிமிடங்களிலேயே ஏற்பாடு செய்து பல உயிர்களை காப்பாற்றி வருகிறார் நடிகர் சோனு சூட். கடந்த ஆண்டு லாக்டவுன் காலத்தில் சொந்த ஊருக்கு செல்ல முடியாமல் அவதியுற்ற புலம்பெயர் தொழிலாளர்களை சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைத்த சோனு சூட், தொடர்ந்து ஒரு வருட காலமாக மக்களுக்கான சேவை நாயகனாக செயல்பட்டு வருகிறார்.

சாரா அலி கான் நிதியுதவி

சாரா அலி கான் நிதியுதவி

இந்நிலையில், நடிகர் சோனு சூட்டின் தொண்டு நிறுவனத்துக்கு தனுஷின் அட்ரங்கி ரே படத்தில் நடித்து வரும் நடிகை சாரா அலி கான் நிதியுதவி வழங்கி உள்ளார். பிரபல பாலிவுட் நடிகர் சைஃப் அலி கானின் மகளான சாரா அலி கான் கொரோனா நோயாளிகளுக்கு உதவும் வகையில் நிதியுதவி அளித்தததை குறிப்பிட்டு நடிகர் சோனு சூட் தனது ட்விட்டரில் சாராவை பாராட்டி உள்ளார்.

நீங்க ஒரு ஹீரோ

நீங்க ஒரு ஹீரோ

உங்களுடைய நன்கொடைக்கு ரொம்ப நன்றி சாரா அலி கான். இந்த இக்கட்டான சூழ்நிலையில் மக்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்ற உங்களது நல்ல எண்ணம் ஏகப்பட்ட இளைஞர்களுக்கு ஒரு எடுத்துக்காட்டாக அமையும். உங்களை எண்ணி நான் மிகவும் பெருமைப்படுகிறேன். நீங்க ஒரு ஹீரோ என சோனு சூட் சாராவை வெகுவாக புகழ்ந்து தள்ளி உள்ளார்.

ஒரே நாளில் 3 கோடி

ஒரே நாளில் 3 கோடி

சோனு சூட், சாரா அலி கான் மட்டுமின்றி ஏகப்பட்ட பாலிவுட் பிரபலங்களும் கொரோனாவால் அவதிப்படும் மக்களுக்காக உழைத்து வருகின்றனர். நடிகர் சல்மான் கான் திரைத்துறையை சார்ந்த 25 ஆயிரம் தொழிலாளர்களுக்கு நிதியுதவி அளிக்க முன் வந்துள்ளார். நடிகை அனுஷ்கா ஷர்மா தனது கணவர் கோலியுடன் இணைந்து ஆரம்பித்துள்ள தொண்டு நிறுவனத்திற்கு ஒரே நாளில் 3 கோடிக்கும் அதிகமான நிதியுதவி கிடைத்துள்ளது. மேலும், அவர்கள் இருவரும் தனித்தனியாக தலா 2 கோடியை கொரொனா நிதியுதவிக்கு அளித்துள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X